ஊராட்சித்தலைவரை பதவி நீக்கம் செய்தல் -சட்டம் சொல்வது என்ன?

ஊராட்சித்தலைவரை பதவி நீக்குதல்

(பிரிவு 205 – 1994 ஆண்டு ஊராட்சிகள் சட்டம் ) :

1. ஊராட்சியின் தலைவர் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் எதனையும் தவறாக பயன்படுத்துகிறார் என தெரிய வந்தாலோ,

2. வழங்கப்பட்ட விதி, துணை விதி, ஒழுங்குமுறை விதி அல்லது சட்டப்படியான ஆணைகள் எதனையும் வேண்டுமென்றே நிறைவேற்ற மறுத்தாலோ,

3. அல்லது கீழ்படியாமல் செயல்பட்டலோ,

சிற்றூராட்சியின் மொத்த உறுப்பினர்களில் 3ல் 2 பங்கு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விபரமான தெளிவான எழுத்துபூர்வ அறிக்கையினை  கிராம ஊராட்சியின் ஏதாவது இரண்டு உறுப்பினர்கள் ஊராட்சிகளின் ஆய்வாளரிடம் (மாவட்டாட்சியர்) நேரடியாக அளிக்க வேண்டும்.

பெறப்பட்ட விண்ணப்பத்தின்படி ஊராட்சியின் தலைவரிடம் அவரது விளக்கத்தினை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்குமாறு எழுத்து மூலமாக கோரப்படும்.

ஊராட்சி மன்றத் தலைவர் தமது விளக்கத்தினை குறிப்பிடப்பட்ட  காலவரையறைக்குள் அளிக்கத் தவறினாலோ, அல்லது ஊராட்சித் தலைவரது விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் இல்லையென ஆட்சியர் கருதினாலோ, அத்தலைவரை நீக்கம் செய்வதற்கான செயல்குறிப்பு ஒன்றினை, அந்த வட்டத்தின் வட்டாட்சியருக்கு ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்டாட்சியர்) அனுப்புவார்.

அதன் அடிப்படையில் வட்டாட்சியர் ஏழு நாட்கள் கால அவகாசம் அளித்து அந்த ஊராட்சியின் தலைவர் மற்றும் ஊராட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு பரிசீலனை மேற்கொள்வதற்காக கூட்ட அறிவிப்பு ஒன்றை அனுப்புவார்.

Also Read  உலக சுகாதார அமைப்பின் கவலை என்னவென்றால்..

 

அந்த கூட்டத்திற்கு வட்டாட்சியர் தான் தலைமையேற்று நடத்த வேண்டும். வேறு எவரும் தலைமையேற்கவோ, கூட்டம் நடத்தவோ உரிமையில்லை.

ஏதேனும் பிற காரணங்களுக்காக கூட்டத்தினை வட்டாட்சியர் குறித்த தேதியில் நடத்த இயலாமல் போனால், அவரே எழுத்து மூலமான அறிக்கையினை ஆய்வாளருக்கு அனுப்பி விட்டு கூட்டத்தினை ஒத்தி வைக்கலாம்.

மேலும், 30 நாட்களுக்குள் மறுகூட்டத் தேதியினை அறிவித்தும், ஏழு நாட்கள் கால அவகாசம் அளித்தும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சித் தலைவருக்கு மீண்டும் கூட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும்.

அதன்படி வட்டாட்சியர் கூட்டம் தொடங்கியவுடன் ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்டாட்சியர்) அறிவிப்பு, தலைவரின் விளக்கம் ஆகியவற்றினை வைத்து ஊராட்சி சார்பாக தனது வாதத்தினை முன்னிருத்தி கூட்டத்தினை நடத்துவார்.

கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சார்பாக பேசவோ, அவரது அறிக்கையின் விளக்கங்களை நியாயப்படுத்தியோ பேசக்கூடாது. கூட்டத்தில் உறுப்பினர்களுடன் விவாதிக்கலாம். வட்டாட்சியருக்கு கூட்டத்தில் ஓட்டளிக்கும் உரிமையும் கிடையாது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் அனைத்துக் கருத்துக்கள்,  ஊராட்சியின் தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றினை விடுதலின்றி பதிவுசெய்து ஆய்வாளருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கையினை ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்டாட்சியர்) பரிசீலித்து மேல் நடவடிக்கை தொடரவோ அல்லது நடவடிக்கையை விட்டு விடவோ செய்யலாம். மேலும் நடவடிக்கையை தள்ளி வைக்கலாம்.

Also Read  பஞ்சாயத்து-கிராமசபை ௯ட்டம்

தலைவரது விளக்கத்தைப் பெற்ற பின் அந்த விளக்கம் திருப்திகரமானது என ஆய்வாளர் கருதினால் தலைவர் மீது நடவடிக்கைகையை நிறுத்தி விடலாம். தலைவரது விளக்கம் திருப்திகரமாக இல்லையென்று கருதினால்  அப்பகுதி வட்டாட்சியர் கிராம ஊராட்சிக் கூட்டத்தை கூட்டி தலைவரை நீக்கம் செய்வது பற்றி ஆய்வாளரின் ஆணை படி கிராம ஊராட்சியின் கருத்தினை தீர்மான வடிவில் பெற்று அனுப்பியதை ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்டாட்சியர்) பரிசீலனை செய்து ஊராட்சி தலைவரை பதவியில் இருந்து நீக்குவார்.

அந்த உத்தரவு அரசு பதிவிதழில் வெளியிடப்படும். அவ்வாறு நீக்கபட்டால் அடுத்த 3 ஆண்டுகள் ஊராட்சி த்ற்தலில் அவர் போட்டியிட இயலாது