கொரோனாவை கற்பித்தவன் காட்டுமிராண்டியா? வம்பளந்தான்!

என்ன சபரி கந்த சஷ்டி கவசத்தை கமெண்ட் அடிச்ச ஒரு கருப்பு ஆட்டை பிடிச்சிட்டாங்கலாமே…!

கறுப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகி செந்தில் வாசன்

மணியா அது அவங்க கருத்து சுதந்திரம் பறிப்பு….மணியா…!
நம்ம நாடு ஜனநாயக நாடு இங்கே எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கு…மணியா!

அது என்னமோ உண்மைதான் சபரி.. அப்படி பேச்சுரிமை… பேச்சுரிமைன்னு தானே… கடவுள் இல்லை… கடவுள் இல்லவே இல்லை..
கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி….!
கடவுளை காட்ட முடியுமா அப்படி..இப்படின்னு….. கோஷம் போட முடிஞ்சுது..!

ஆமா அது பகுத்தறிவின் வெளிப்பாடு… மணியா…!

ஆமா…. ஆமா… இந்து கடவுளை மட்டும் தனே பேசுறது தான் பகுத்தறிவின் வெளிப்பாடு…. மத்த மதக்கடவுளே பேசினீங்களா…? அப்படி நீங்க வேற ஒரு மதக்கடவுளை பேசியிருந்தா உங்க டவுசர் கிழிஞ்சு போயிடும் இல்ல…!

என்ன மணியா…! கடவுள் இருக்காரு சொல்றீங்க கடவுள் இருந்திருந்தால் கண்ணுல காட்டுங்க அப்படீன்னு நாங்க சொல்றோம் அவ்வளவுதான்..

சரி சபரி நான் உன்கிட்ட ஒன்னு கேக்குறேன் உன்னால் பதில் சொல்ல முடியுமான்னு பார்க்கிறேன்..!

வேண்டாம் மணியா நீ ஏடாகூடமா ஏதாவது வம்பு புடுச்ச கேள்வியா கேட்டு வைப்பே..!

என்ன சபரி நீ ஒரு பகுத்தறிவுவாதி உன் கிட்ட போயி நான் அப்படி பேச முடியுமா..?

Also Read  கருணாநிதி குடும்பத்தில ரெண்டு விக்கெட் எடுக்க பாஜக திட்டம்- வம்பளந்தான்

சரி ! என்ன கேள்வி கேளு..?

கடவுளை பாக்க முடியுமா..? முடியாது..? அது மாதிரி கொரோனாவை பாக்க முடியுமா…?

ம்..ம்…ம்..வந்து…ம்.. மணியா நீயே சொல்லிட்டியே பாக்க முடியாதுன்னு..!

அப்போ சபரி நீ சொல்றத வச்சு நம்ம யோசிச்சுப் பார்த்தா… கொரோனாவை கற்பித்தவன் காட்டுமிராண்டி அப்படித்தானே…?

அடப்பாவி மணியா இதுக்குத்தான் நான் மொதல்லேயே சொன்னேன். நீ ஏதாவது வம்பு தும்பா கேப்பேன்னு எனக்குத் தெரியும்…!

இதோ பாரு சபரி கடவுளோட செயல்பாட்டை உணரத்தான் முடியும்.
அதே மாதிரி கொரோனாவின் செயல்பாட்டையும் உணரத்தான் முடியும்…

அப்போ மணியா.. நீ சொல்லறதை வச்சு பார்த்தா கடவுளும்… கொரோனாவும்‌…. ஒன்னுங்கரா..!

ஆமா சபரி…. அப்படி கடவுளும் கொரோனாவும் ஒன்னுதான் சொல்லிட்டா…. நீ கொரோனாவை கற்பித்தவன் காட்டுமிராண்டி சொல்லுவியா..?

அட என்னப்பா நீ ஏதோ புதுசு புதுசா சொல்லிட்டு இருக்குற….!

அட என்னப்பா சபரி நீ தான் பகுத்தறிவாதியாச்சே…. கொரோனா பேரச்சொல்லி கை கால் எல்லாத்தையும் சுத்தமாக வச்சுக்கோ அப்படி இல்லைனா உன்ன தண்டிக்கும் கண்டிக்கும்…அப்படி இப்படின்னு சொல்றியே… அப்படி என்ன உன் கொரோனா பெரிய லாடு லபக்கா…?
எங்கே உன் கொரோனாவை காட்டு பார்க்கலாம்..? அதுக்கப்புறம் உன் கொரோனாவுக்கு மதிப்பு கொடுத்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்றேன்……!

Also Read  தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - பீதியில் தமிழக மக்கள்

ஐயா சாமி நீ மதிப்பும் தரவேண்டாம்.. கும்பாபிஷேகமும் செய்யவேண்டாம்… வேண்டாம் ஆள விடு…!