விஷால் பட பிரச்சனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் விஷால் – நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 8.29 கோடி (ரூ.8,29,57,468) ரூபாயை திருப்பித் தருவதாகக் கூறி ரவீந்திரன் உடன் உறுதி அளித்து விஷால் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது. இதனால் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் சக்ரா படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஆக்சன் திரைப்பட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.8.29 கோடிக்கான உத்திரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும். எந்த வகையில் உத்திரவாதம் அளிக்க போகிறார் என்பது குறித்து அக்டோபர் 9 ம்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு விட்டார். மேலும் வழக்கை அக்டோபர் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Also Read  உன் சமையலறையில், நான் உப்பா.? சர்க்கரையா.? : தேன் சிந்தும் ராகங்கள் கேளீர்.!