விலாரிபாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

விலாரிபாளையம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விலாரி  பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் திருமதி M. செல்வராணி மணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது .

இக்கூட்டத்தில்  உதவி கோட்ட பொறியாளர் திருமதி கவிதா நெடுஞ்சாலைத்துறை) முன்னிலையில் நடைபெற்றது

மேலும் இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை,மற்றும் ,  ஏனைய  துறைகள் கலந்துகொண்டு கிராம சபாவில் பொதுமக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்திடத் தேவையான விளக்கங்கள்  ஊராட்சியின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

ஊராட்சி செயலாளர்  .K  சிவசங்கர் அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து வாசித்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினார் .

முடிவில் பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது .

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Also Read  ஏழை மாணவியின் மருத்துவ படிப்புக்கு உதவிய - ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஊராட்சி மன்ற தலைவி