நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

*மக்கள் வியந்து பாராட்டும் அளவிற்கு வல்லராமபுரத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி கிராம சபா கூட்டம்!*

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வல்லராமபுரத்தில் எனது தலைமையில் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி கிராமசபா கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது…

நேர்மையான நிர்வாகம் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக வரவு செலவு கணக்குகள் பேனரில் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் திருமதி.வசந்தா அவர்கள், நடுவக்குறிச்சி மைனர் கிராம நிர்வாக அலுவலர் திரு.குருசாமி அவர்கள், காவல்துறை சார்பில் சின்னகோவிலாங்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகானந்தம் அவர்கள், ஊராட்சித் துறை சார்பில் பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.முத்துமணி அவர்கள், கால்நடை துறை சார்பில் கால்நடை மருத்துவர் திரு.நாகராஜ் அவர்கள், வேளாண்மைத்துறை சார்பில் உதவி வேளாண் அலுவலர் திரு.லெட்சுமணன் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஆய்வாளர் திரு.மாரித்துரை அவர்கள், கூட்டுறவுத் துறை சார்பில் மாவட்ட கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் திரு.சுப்பையா பாண்டியன் அவர்கள், குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் விற்பனையாளர் திருமதி.சாந்தா அவர்கள், வல்லராமபுரம் பள்ளி தலைமையாசிரியர் திரு.சாமியா அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அந்தந்த துறைகளில் மக்கள் பயன்பெறுவதற்கு உரிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்…

Also Read  பலமிழந்த பாலத்தை சரிசெய்ய நா.கோவில்பட்டி மக்கள் கோரிக்கை

ஊராட்சி பெரியவர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் 2 மரக்கன்றுகள் நடப்பட்டன… கூட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொண்ட வல்லராமபுரம், சூரங்குடி, புதுக்கிராமம் அருணாசலபுரம் (எ) மாயம்பாறை கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு எனது சொந்த செலவில் ரஸ்னா, கூல்ட்ரிங்க்ஸ், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன…

பொதுமக்களின் தேவைகள் தனித்தனியாக கேட்டறியப்பட்டு, அதற்குரிய பல்வேறு தீர்மானங்கள் கிராமசபா ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன…

நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் துணைத் தலைவர் திரு.முத்துப்பாண்டி, வார்டு உறுப்பினர்கள் திருமதி.வெள்ளத்துரைச்சி வெள்ளத்துரை, திரு.திருமலைசாமி, திருமதி.பூமாரி கோபால், திரு.கண்ணன் (எ) பேச்சிமுத்து, திருமதி.சாமித்தாய் விஜயமணி, ஊராட்சி செயலர் திரு.மாரித்துரை, பணித்தள பொறுப்பாளர்கள் திருமதி.முத்துலட்சுமி, திரு.செந்தில்குமார், துப்புரவு பணியாளர் திரு.கருப்பசாமி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்…

*என்றும் மக்கள் பணியில்,*
*முனைவர்.S.சிவஆனந்த், BE,MBA.,*
*ஊராட்சி மன்ற தலைவர்,*
*நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி*