வஞ்சிக்கு வந்த ஆபத்து!!!

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வஞ்சிநகரம் ஊராட்சி பகுதியான நெல்லுகுண்டுபட்டியில் இருக்கும் பள்ளிக்கு அருகாமையில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையில் மிகவும் பழமை வாய்ந்த பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி இடியும் தருவாயில் மிகவும் ஆபத்தான இடத்தில் இருக்கிறது.

அது இடிந்து விபத்து ஏற்படும் முன் இதனை அகற்றிவிட்டு புதிய தண்ணீர் தேக்க தொட்டியை கட்டித் தரவேண்டும் என வஞ்சிநகரம் இளைஞர்கள் அமைப்பினர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.


செய்தியாளர்: விஜய் மேலூர் மதுரை

Also Read  ஆட்டுக்குளம் ஊராட்சி - மேலூர் சட்டமன்றத் தொகுதி