வண்டல் ஊராட்சிக்கு மூன்று மாத முதல் கணக்கு நிதி 1476 ரூபாய்

சிவகங்கை மாவட்டம்

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து வண்டல் ஆகும்.

வண்டல் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்படியெனில்,சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அந்த வண்டல் ஊராட்சிக்கு கடந்த மூன்று மாத மாநில நிதியாக முதல் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது வெறும் 1476 ரூபாய்.

இந்த பணத்தை வைத்தே அந்த ஊராட்சிக்கு தேவையான அன்றாட செலவுகளை செய்யவேண்டும்.

அதாவது மாதம் 500 ரூபாய்க்குள் ஊராட்சியின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டுமாம்.

மாநில நிதி பெறுவதற்கான வழிமுறையின் படி அவ்வளவு தான் என்கின்றனர் அதிகாரிகள்.

முதியோர் ஓய்வூதியம் கூட மாதம் ஆயிரம் என்றிருக்கும் நிலையில், ஒரு ஊராட்சிக்கு மாத நிதி 500 க்கும் கீழ் என்பது அபத்தமாக இருக்கிறது.

அடிப்படை வருமானம் இல்லாத ஊராட்சிகளுக்கு  விதிகளை கடந்து,குறைந்த பட்சம் மாதம் முப்பதாயிரம் ரூபாய் வழங்கினால் மட்டுமே மக்கள் பணி நடக்கும்.

இந்த நிலை, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஊராட்சிகளின் நிலையாக உள்ளது.

விடியல் அரசிலும் ஊராட்சிகளுக்கு விடியல் இல்லை.

Also Read  தேவஸ்தானம் ஊராட்சி - திருப்பத்தூர் மாவட்டம்