ஸ்ரீவெங்கடேஸபுரம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஓன்றியம் ஸ்ரீவெங்கடேஸபுரம் ஊராட்சிக்குட்பட்ட பேய்க்குளம்,ஆசீர்வாதபுரம்,சவேரியார்புரத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பேய்க்குளத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

பேய்க்குளத்தில் நடந்த முகாமில் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சண்முக லட்சுமி,ஊராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜ்,கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாத்,கிராம உதவியாளர்,சத்துணவு அமைப்பாளர் ஜான்ஸி மலர்விழி,ஊராட்சி செயலர் மனுவேல்,சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ்,ரேஷன் கடை பணியாளர் பிரகாஷ்,சிகரம் இயக்குனர் முருகன்,நர்ஸ்கள்,ஆசிரியர்,சுகாதார பணியாளர்கள்,மகளிர் குழு உறுப்பினர்கள்,தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள்:தூத்துக்குடி முருகன்

Also Read  குமாரகிரி ஊராட்சி - தூத்துக்குடி மாவட்டம்