ஜெகதேவி ஊராட்சியில் தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் ஜெகதேவி ஊராட்சியில் உள்ள சமுதாயகூடத்தில்இன்று கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் ஜெகதேவி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஜெயந்தி தலைமையிலும் பர்கூர் வட்டார மருத்துவர் திரு .சிவகுமார் மற்றும் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன் , அன்னபூரணி, ஜெகதேவி ஒன்றிய குழு உறுப்பினர் அப்சர்பேகம் ,ஜெகதேவி ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சரவணன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி ஆகியோர் முன்னிலையில் சுமார் 300 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த முகாமில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் இலக்கிய , மாலா , ரோஜா. நவீன் குமார், ஜாகீதா, பரிமளம் மாலஸ்திரி, சவுக்கார் பாஷா, அனிதா ,தேவகி ,தெய்வ லக்ஷ்மி,கிராமநிர்வாகஅலுவலர் இராமேஷ், சுகாதராய்வாளர்கள் பாபு, இராஜேஷ்குமார் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ,துப்புரவு பணியாளர்கள் ,தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் , தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் தி.செங்கதிர் செல்வன் ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்

Also Read  சேலத்தில் பல ஆண்டுகளாக காலியாக கிடந்த ஊராட்சி செயலர் பதவி - பணி நியமனம் வழங்கிய அதிமுக மாணவரணி செயலர்