வரி ஏய்ப்பில் இருவர் கைது – வணிக வரித்துறை நடவடிக்கை

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு செய்த இரண்டு போலி வணிகர்கள் கைது : சிறையில் அடைப்பு.

வணிகவரித் துறையில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின்போது சென்னை கோட்டத்திற்குட்பட்ட திருவா. கோல்டன் டிரேடர்ஸ் மற்றும் திருவா. ராயல் டிரேடர்ஸ் என்னும் நிறுவனங்கள் சரக்குகளை வழங்காமல் அலுமினியம், தாமிரம், இரும்பு மற்றும் எஃகு கழிவுகள் விற்பனை செய்ததாகப் போலி பட்டியல்கள் மூலம் பயனாளருக்கு மோசடியாக வணிகம் செய்வது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில், கூடுதல் தலைமைச் செயலர் / வணிகவரி ஆணையா அவர்களின் ஆணையின்படி, இணை ஆணையர் (மா.வ.), சென்னை, நுண்ணறிவு- || அலுவலர்களால், போலிப் பட்டியல்கள் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 27 வணிகர்களின் வியாபார இடங்களில், சரக்கு மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்கீழ் திடீராய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது, திரு, யாசர் அராஃபத், வயது 28, (உரிமையாளர்,திருவா. கோல்டன் டிரேடர்ஸ், சென்னை) என்பவர், ரூ.29.09 கோடி அளவிலும், திரு. ஜாகிர் உறசன், வயது 40, (உரிமையாளர்,திருவா. ராயல் டிரேடர்ஸ், சென்னை) என்பவர் ரூ.24.40 கோடி அளவிலும் போலி இரசீதுகள் வழங்கி ரூ.5.23 கோடி மற்றும் ரூ4.39 கோடி அளவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

Also Read  செட்டிதாங்கள் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

இவ்வாறு சரக்குகளை விற்காமல் போலி ரசீதுகள் அளித்து போலியாக உள்ளீட்டு வரியைப் பயனாளிகள் துய்க்கச்செய்தது சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, துணை ஆணையர் (LOIT. GL.), புலனாய்வு- II, நுண்ணறிவு – II, சென்னை மற்றும் மாநிலவரி அலுவலர்களால் இன்று (10.01.2022) திரு. யாசர் அராஃபத், உரிமையாளர், திருவா. கோல்டன் டிரேடர்ஸ், சென்னை மற்றும் திரு.ஜாகிர் ஹசன், உரிமையாளர், திருவா. ராயல் டிரேடர்ஸ், சென்னை ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறையின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பொருளாதார குற்றவியல் நடுவர் – 11, எழும்பூர், சென்னை அவர்கள் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணைக்கு பின்பு இரண்டு வணிகர்களும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

மேலும்,இவ்விரண்டு வணிகர்களிடமிருந்து போலியான விற்பனை இரசீதுகளைப் பயன்படுத்தி கொள்முதலில் ஈடுபட்ட வணிகர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.