ஊராட்சி செயலாளர் பதவிக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள சட்டமுன்வடிவின் படி இனி அனைத்து பொதுத்துறை நிறுவனம்,வாரியங்களிலும் பணியாளர்கள் சேர்க்கை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாகவே நடைபெற உள்ளது.

வரும் கூட்டத்தொடரில் இந்த சட்டமுன்வடிவில் உள்ளாட்சி அமைப்பு மற்றும் பலகலைகழங்களில் ஏற்பாடும் காலிப் பணி இடங்களும் tnpsc மூலமாக நிரப்பிடும் வகையில் சேர்க்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்து உள்ளார்.

மாநில தலைவர்
மாநில தலைவர்

ஆக…தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் தொடர்ந்து வழியுறுத்தி வந்த முக்கியமான இந்தக் கோரிக்கை நடைமுறைக்கு வர உள்ளது.

இனி….ஊராட்சி செயலாளர் பணிக்கு தேர்வு எழுவது கட்டாயம் ஆகிறது.

Also Read  மூன்றாண்டு பணி முடித்த ஊராட்சி செயலர்களுக்கு வட்டாரத்துக்குள் பணியிட மாறுதல் வழங்கிடுக-மாநில தலைவர் கோரிக்கை