TNPSA-மகத்தான சாதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் சில நிர்வாக காரணங்களால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களின் ஆலோசனையின்படி மாவட்ட மையம் தொடர் முயற்சி மேற்கொண்டு வந்தது..

இது தொடர்பாக கடந்த வாரம் மதிப்புமிகு திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஜான்போஸ்கோ பிரகாஷ்

அதன் பலனாக இன்று ஒரே நாளில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் 7 மீள் பணியமர்வு மற்றும் பணிமாறுதல் உத்தரவுகளை மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பிறப்பித்துள்ளார்கள்.

மேற்படி உத்தரவுகளை வழங்கிய மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும்,மதிப்புமிகு கூடுதல் ஆட்சியர் அவர்களுக்கும்,உயர்திரு.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)அவர்களுக்கும்,ஏனைய அலுவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை மாவட்ட மையத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இது தொடர்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி.V.சுரேஷ்,மாவட்ட செயலாளர் ஆர்.சீதாராமன்,ஆர். சிவகுமார்,மாவட்ட பொருளாளர் எம்.ஏழுமலை மாவட்ட துணைத்தலைவர் நாராயணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
திருவண்ணாமலை மாவட்ட மையம்

Also Read  கோட்டுமுளை ஊராட்சி - கடலூர் மாவட்டம்