திருநெல்வேலி – அகரம் சாஸ்தா புதுக்காவுடையார் கோயில் – ஒரு சிறப்பு பார்வை

அகரம் சாஸ்தா புதுக்காவுடையார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், அகரம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.

அகரம் சாஸ்தா கோயில்

இக்கோயிலில் சாஸ்தா புதுக்காவுடையார் சன்னதியும், பேச்சியம்மன், வண்ணியராசா, கவுசுதம்பிரான், கண்ணியம்மாள், மாடன், மாடத்தி, ஒண்டிவீரப்பன், கருப்பசாமி, சின்னதம்பி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின்  கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் சிவகாம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

Also Read  சாலையை சீர் செய்யாத அதிகாரிகள் - போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்