மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (நவம்பர் 29 – டிசம்பர் 06)

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2020 நவம்பர் 29 – முதல், டிசம்பர் 06 வரையிலான

சார்வரியாண்டு கார்த்திகை 15 -ஆம் தேதி முதல் கார்த்திகை 21 – மாதம் தேதி வரை

மேஷம் ராசி

மேஷம் : அவசர அவசிய பயணங்கள் இருக்கும் . வீட்டில் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். தாயார் வகையில் மருத்துவ செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைகொடுக்கும். மாமியார் மருமகளிடையே இருந்த மன கசப்புகள் மறையும். விட்டு கொடுத்து ஒன்றிணைவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளால் டென்ஷன் அடைவீர்கள் .தந்தையின் ஆலோசனைகளை கேட்பது நலம் தரும்.

பரிகாரமாக : வராகி  அம்மனை வழிபடுங்கள்.

ரிஷபம் ராசி

ரிஷபம் : இல்லறம் இனிக்கும். மனைவியின் ஆசைகள் கோரிக்கைகள் நிறைவேற்றுவீர்கள். பெண்கள் பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்குவீர்கள். நிறை குறைகள் இருக்கும். வட்டி வாடகை பாக்கிகள் வசூலாகும் . குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது . சுப விசேஷத்திற்கான தேதி முடிவு செய்வீர்கள். கல்வி வகையில் செலவுகள் உண்டாகும்.

பரிகாரமாக : சரபேஸ்வரரை வழிபடுங்கள்.

மிதுனம் ராசி

மிதுனம் : வீண் செலவுகள் உண்டாகும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். நிதானத்தையும் பொருமையும் கடை பிடிப்பது நலம் தரும். வீட்டில் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். புதிய மின்சாதனங்கள் வாங்குவீர்கள். தாய்  வழி உறவுகள் மூலம் அலைச்சல் செலவுகள் இருக்கும் .கர்ப்பமாக இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். பொன் பொருள் சேரும். அலுவலக வேலை சம்பந்தமாக  திடீர் வெளியூர் பயணங்கள் இருக்கும் .

Also Read  துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் - (பிப்ரவரி 01 - பிப்ரவரி 07) 2021

பரிகாரமாக : சிவ தரிசனம் நல்லது.

கடகம் ராசி

கடகம் : எதிர்பார்த்த  பணம் கைக்கு வரும். வீட்டில் விருந்து விஷேசத்திற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீடு மாறுவது சம்பந்தமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும் . அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். மாமனார் மூலம் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். தொழில் சாதகமாக இருக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பெரிய கான்ட்ராக்ட்  கைக்கு வரும்.

பரிகாரமாக : லெட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள்.

சிம்மம் ராசி

சிம்மம் : நிறை குறைகள் இருக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு பாசம் காட்டுவார்கள். கண் சம்பந்தமாக மருத்துவ சிகிச்சை கள் வரும். சொத்து சம்பந்தமாக வாரிசுதாரர்களிடையே சுமுக உடன்பாடு உண்டாகும். மன நிம்மதி மகிழ்ச்சி அடைவீர்கள். வட்டி வாடகை குத்தகை பாக்கிகள் வசூலாகும். வங்கியில் அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள்.

பரிகாரமாக : ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

கன்னி ராசி

கன்னி : சுப யோகமுண்டு. தாய்  வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும். மகள் திருமண விஷயமாக நல்ல இடத்து சம்பந்தம் கூடி வரும். புதிய வேலை தேடியவர்களுக்கு நல்ல நிறுவனத்தில்  வேலை அமையும். வழக்கு சம்பந்தமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. தந்தை மூலம் மருத்துவ செலவுகள் வரும். சகோதரர்களிடையே சில மனகசப்புகள் வரலாம். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். காலியாக இருக்கும் பிளாட்டிற்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள்.

Also Read  வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்களும் அதிசயங்களும் - ஒரு சிறப்பு பார்வை

பரிகாரமாக :குலதெய்வத்தை வழிபடுங்கள்.

ஜோதிடர் : பேய்க்குளம் முருகன்,

தொலைபேசி எண் : 6374210675