மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச் 07) 2021

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2021 மார்ச் 01 – முதல், மார்ச் 07 வரையிலான

சார்வரியாண்டு மாசி 17 -ஆம் தேதி முதல் மாசி 23 – மாதம் தேதி வரை

மேஷம் ராசி

மேஷம் : நிறைகுறைகள் இருக்கும். தாயார் வழியில் மருத்துவ செலவுகள் வரும். நீங்கள் யார்க்கும் ஆலோசனை கூறவேண்டாம். சுப விரயங்கள் வரும்.நிலம், பிளாட் வாங்குவது விற்பது சம்பந்தமான முயற்சி வெற்றியடையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது வண்டி வாங்குவீர்கள். வெள்ளி, சனி சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக நவகிரகங்களை வழிபடுங்கள்.

ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி

ரிஷபம் : அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சகோதர உறவுகளிடையை கருத்து வேறுபாடுகள் வரும். திடீர் பயணங்கள் ஏற்படும். பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மீது பாசம் காட்டுவார்கள்.
ஞாயிறு சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக வராகி அம்மனை வழிபடுங்கள. தொழு நோயாளிக்கு உதவி செய்யுங்கள்.

மிதுனம் ராசி
மிதுனம் ராசி

மிதுனம் : பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும். திடீர் வெளிநாடு செல்லும் யோகமுள்ளது. வராது என்று நினைத்த பணம் உடனே வரும். செல்வாக்கு உயரும். வீடு கட்ட அரசின் அனுமதி உடனே கிடைக்கும். மாமன் வகை உறவுகளால் ஆதயம் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.

Also Read  துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம் - 2020 (அக்டோபர் 12 - அக்டோபர் 18)

பரிகாரமாக கற்பகம்மாளை வழிபடுங்கள்.

கடகம் ராசி
கடகம் ராசி

கடகம் : சொத்து சம்பந்தமான விஷயங்களில் நல்ல முடிவு எடுப்பீர்கள். மகள்,மாப்பிளை மூலம் செலவுகள் உண்டாகும். கர்ப்பமாக உரிய மருத்துவ ஆலோசனைகளை பெறுங்கள்.
நண்பர்களிடம் பட்டும் படாமலும் இருங்கள். புதிய தொழில்தொடங்குவதற்கான யோகம் வந்துள்ளது.

பரிகாரமாக சக்கரத்தாழ்வாரை துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.

சிம்மம் ராசி
சிம்மம் ராசி

சிம்மம் : அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த லோன் உடனே கிடைக்கும். உத்யோக வகையில் சாதகமான மாற்றம் வரும். தாய் வழி உறவுகளால் அலைச்சல், செலவுகள் வரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி வரும்.

பரிகாரமாக துர்க்கையம்மனை வழிபடுங்கள்.

கன்னி ராசி
கன்னி ராசி

கன்னி : மகள் திருமண விஷயமாக நல்ல தகவல் வரும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.கண் சம்பந்தமான மருத்துவ செலவுகள் வரும். மாமியார், மருமகளிடையை இருந்த மனகசப்புகள் நீங்கும். பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவார்கள்.

பரிகாரமாக அம்பாளை வழிபடுங்கள்.

ஜோதிடர் : பேய்க்குளம் முருகன்,

தொலைபேசி எண் : 6374210675