மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (பிப்ரவரி 22 – பிப்ரவரி 28) 2021

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2021 பிப்ரவரி 22 – முதல், பிப்ரவரி 28 வரையிலான

சார்வரியாண்டு மாசி 10 -ஆம் தேதி முதல் மாசி 16 – மாதம் தேதி வரை

மேஷம் ராசி

மேஷம் : சாதக பாதகங்கள் இருக்கும். சொந்த பந்தங்களிடையே சில கருத்துவேறுபாடுகள் வரலாம். பேச்சில் நிதானம் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் செவ்வாய் கிழமை கிடைக்கும். பெண்கள் விரும்பிய ஆடை ஆபரணங்கள் வாங்குவார்கள். காலியாக இருக்கும் பிளாட்டிற்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள். நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். மகள் திருமண திருமண விஷயமாக முக்கிய சந்திப்புகளும் முடிவுகளும் வரும்.

பரிகாரமாக சிவன் கோயில் பள்ளியறைக்கு தேவையான பூஜை பொருள் வாங்கி கொடுங்கள்.

ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி

ரிஷபம் : எதிலும் சற்று நிதானமாக செயல்படுங்கள். உத்யோக வகையில் சாதகமான நிலை இருக்கும். நண்பர்களிடமிருந்து சற்று விலகியருங்கள். பெண்களுக்கு வேலை செய்யுமிடத்தில் பிரச்சினை வரலாம். வீட்டு வேலையை தொடங்குவீர்கள்.

பரிகாரமாக சரபேஸ்வரரை வழிபடுங்கள்.ஊனமுற்றோர்க்கு உதவி செய்யுங்கள்.

மிதுனம் ராசி
மிதுனம் ராசி

மிதுனம் : உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகள் மாப்பிளை மூலம் செலவுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மாமியாருக்கு மருத்துவ செலவுகள் செய்வீர்கள். வாடகை, வட்டி, குத்தகை பாக்கிகள் வசூலாகும்.

பரிகாரமாக துர்க்கையம்மனை வழிபடுங்கள்.

கடகம் ராசி
கடகம் ராசி

கடகம் : அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. பிள்ளைகள் போக்கில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.பொன், பொருள் வீடு சேரும். வீடு, நிலம் சம்பந்தமாக முடிவு எடுப்பீர்கள்.

Also Read  துலாம் முதல் மீனம் வரை இந்த வாரம்-( ஜூன் 29 - ஜூலை05)

பரிகாரமாக வராகி அம்மனை வழிபடுங்கள்.

சிம்மம் ராசி
சிம்மம் ராசி

சிம்மம் : அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிற்சங்கம்,கூட்டுறவு அமைப்புகளில் இருப்பவர்களுக்கு கெளரவமான பதவி கிடைக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள், சொந்த, பந்தங்களில் சுப விசேஷங்களுக்கு பணம் செலவாகும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள்.

பரிகாரமாக கோவிந்தனை வழிபடுங்கள்.

கன்னி ராசி
கன்னி ராசி

கன்னி : தேவையில்வாத செலவுகள் உருவாகும். எதிர்பாராதவிதமாக கடன் வாங்குவீர்கள். கண் சம்பந்தமான நோய்கள் உருவாகும். பெண்கள் புது வண்டி வாங்குவார்கள். வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல இடத்தில் வீடு கிடைக்கும். மாமியார் மருமகளிடையை சில மனகசப்புகள் வரும்.

பரிகாரமாக தினமும் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபடுங்கள்.

ஜோதிடர் : பேய்க்குளம் முருகன்,

தொலைபேசி எண் : 6374210675