மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (பிப்ரவரி 15 – பிப்ரவரி 21) 2021

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2021 பிப்ரவரி 15 – முதல், பிப்ரவரி 21 வரையிலான

சார்வரியாண்டு மாசி 03 -ஆம் தேதி முதல் மாசி 09 – மாதம் தேதி வரை

மேஷம் ராசி

மேஷம் : தடைபட்ட காரியம் சம்பந்தமாக நல்ல தகவல் வரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி கிடைக்கும். வீண் செலவுகள் உண்டாகும். வீடு மாற வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். தாயார் மூலம் மருத்துவ செலவுகள் வரும். பயணத்திட்டங்களில் தடைகள் அல்லது மாற்றங்கள் வரலாம்.

பரிகாரமாக : துர்கை அம்மனை வணங்குங்கள்.

ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி

ரிஷபம் : நிறை குறைகள் இருக்கும் .உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள். உத்யோகத்தில் இடமாற்றம் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் பரிசு பதக்கங்களை வெல்வீர்கள். பெண்கள் இரு சக்கர வண்டி வாங்குவார்கள். நண்பர்களிடையே மன கசப்புகள் வாக்குவாதங்கள் உண்டாகும்.

பரிகாரமாக : பைரவரை வணங்குங்கள்.

மிதுனம் ராசி
மிதுனம் ராசி

மிதுனம் : குழப்பங்கள் நீங்கித் தெளிவான முடிவு எடுப்பீர்கள். எதிர்பார்த்த பெரிய தொகை திங்கட்கிழமை கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நேரம் . நீண்ட நாளாக இழுத்து கொண்டிருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து சம்பந்தமாக வாரிசுதாரர்களிடையே சுமூக உடன்பாடு உண்டாகும். எதிர்பார்த்த சுப செய்தி புதன்கிழமை வரும்.

Also Read  மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (மார்ச் 01 – மார்ச் 07) 2021

பரிகாரமாக : ஆஞ்சநேயரை வணங்குங்கள்.

கடகம் ராசி
கடகம் ராசி

கடகம் : புதிய எண்ணங்கள் திட்டங்கள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் திருமணம், வேலை சம்பந்தமாக கவலைகள் வந்து நீங்கும். முக்கிய விஷயங்கள் அனுகூலமாக முடியும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். சொத்து சம்பந்தமாக புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.

பரிகாரமாக : லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.

சிம்மம் ராசி
சிம்மம் ராசி

சிம்மம் : குழப்பங்கள் நீங்கி தைரியமாக முடிவு எடுப்பீர்கள். உங்கள் எதிராளி தோல்வியடைவார்கள். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் யோகமுள்ளது. வீண் பேச்சு வேண்டாம். திங்கள்,செவ்வாய் கிழமை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக : அம்பாளை வழிபடுங்கள்.

கன்னி ராசி
கன்னி ராசி

கன்னி : வெளிநாட்டு வேலை யோகமுள்ளது. பெண்களுக்கு தாய் வீட்டிலிருந்து வரவேண்டிய பணம், நகை வரும்.வராது என்று நினைத்த பணம் உடனே வரும். மகள் திருமண விஷயமாக நல்ல இடத்து சம்பந்தம் வரும். கண், தொண்டை சம்பந்தமான நோய்கள் வரும்.
புதன், வியாழன் கிழமை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக நவகிரகங்களை நெய் தீபமேற்றி வழிபடுங்கள.