மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (பிப்ரவரி 08 – பிப்ரவரி 14) 2021

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2021 பிப்ரவரி 08 – முதல், பிப்ரவரி 14 வரையிலான

சார்வரியாண்டு தை 26 -ஆம் தேதி முதல் மாசி 02 – மாதம் தேதி வரை

மேஷம் ராசி

மேஷம் : நிறை குறைகள் இருக்கும். தந்தை வகையில் மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். வீட்டில் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். கர்ப்பமாக இருப்பவர்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பழைய வண்டியை மாற்றி புதிய வண்டி வாங்குவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் கை ஒங்கும். பதவி பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோக வகையில் வெளியூர் மாற்றம் உண்டாகும். திங்கள் கிழமை எதிர்பார்த்த சுப செய்தி வரும்.

பரிகாரமாக ஸ்ரீராமரை வழிபடுங்கள்.

ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி

ரிஷபம் : அக்கா, தங்கையிடையை கருத்து வேறுபாடுகள் வரலாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வாரிசுதாரர்களிடையை சுமூகமான உடன்பாடுகள் ஏற்படும். பயண திட்டங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். பேரன் பேத்திகள் மூலம் செலவுகள் ஏற்படும் திங்கள், செவ்வாய் கிழமை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக குலதெய்வத்தை வழிபடுங்கள.

மிதுனம் ராசி
மிதுனம் ராசி

மிதுனம் : தான் உண்டு, தான் வேலை உண்டு என இருங்கள். மாமன் வகை உறவுகளால் செலவுகள் ஏற்படும் பணி நிரந்தரம் சம்பந்தமாக நல்ல செய்தி வரும். கணவன், மனைவியிடையை மனக்கசப்புகள் வந்து நீங்கும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய சான்றிதழ்கள், அனுமதி கடிதம் உடனே கிடைக்கும். புதன், வியாழன் கிழமை சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

Also Read  மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம்- (ஜூலை 13 -19)

பரிகாரமாக ரமணர், யோகிராம் சுரத்குமார் போன்ற மகான்களை தியானியுங்கள்.

கடகம் ராசி
கடகம் ராசி

கடகம் : தாயார் மூலம் மருத்துவ செலவுகள் வரும். வாடகை, வட்டி, குத்தகை பாக்கி உடனே வசூலாகும். சுப விசேஷங்களுக்கு தேதியை முடிவு செய்வீர்கள். சொத்து சம்பந்தமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகள் திருமண விஷயமாக நல்ல செய்தி வரும். வெள்ளி, சனி, ஞாயிறு சந்திராஷ்டமாததால் கவனமாக இருங்கள்.

பரிகாரமாக சரபேஸ்வரரை வழிபடுங்கள.

சிம்மம் ராசி
சிம்மம் ராசி

சிம்மம் : அலைச்சல் டென்ஷன் வந்து நீங்கும். தந்தை உறவுகளால் சில கரருத்து வேறுபாடுகள் வரும். எதிர்பாராத செலவுகள் வரும். அவசர தேவைக்கு நகைகளை அடமானம் வைக்க வேண்டி வரும். வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பிரச்சினை வரலாம். கவனமாக இருப்பது நல்லது. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு.

பரிகாரமாக சக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்.

கன்னி ராசி
கன்னி ராசி

கன்னி : தேவையில்லாமல் உணர்ச்சி வசப்படுவீர்கள். கல்வி வகையில் செலவுகள் இருக்கும். புதிய செல்போன் லேப்டாப் வாங்குவீர்கள். தாய் வழி உறவுகளால் செலவுகள் இருக்கும். கர்ப்பமாக இருப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பது நலம் தரும். மாமியார் மருமகளிடையே மன கசப்புகள் வரலாம். காலியாக இருக்கும் இடத்திற்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள். டென்ஷன் குறையும்.

பரிகாரமாக முருகரை வணங்குங்கள்.