மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம்- (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)

ராசி பலன்கள்
ராசி பலன்கள்

2020 ஆகஸ்ட் 17 – முதல், ஆகஸ்ட் 23 வரையிலான

சார்வரியாண்டு ஆவணி 01 -ஆம் தேதி முதல் ஆவணி 07 – மாதம் தேதி வரை

மேஷம் ராசி

மேஷம் : புதிய உத்வேக செயல்பாடுகள்,குடும்பத்தில் மகிழ்ச்சி,சகோதரி திருமண விஷயத்தில் நல்ல செய்திகள் வரும். பூர்விக சொத்து பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் நன்றாக இருக்கும். அநாவசிய செலவுகள்,உடல் நல கோளாறுகள் வரும்.

பரிகாரமாக குலதெய்வத்தை வழிபடுங்கள்.

ரிஷபம் ராசி

ரிஷபம் : நிறை குறைகள் இருக்கும். பிறர் விஷயங்களில் தலையிடவேண்டாம்.உடல் நல கோளாறுகள் வந்து நீங்கும். எதிர்பாராத விஷயங்கள் கூடி வரும். வீடு பார்ப்பவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும்.வாடகைபாக்கிகள் அனைத்தும் வசூலாகும். மருமகள்,மாமியாரிடையே மனகசப்புகளுடன் நல்லுறவு உண்டாகும்.

பரிகாரமாக லலிதா ஸஹஸ்ரநாமம் படியுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.

மிதுனம் ராசி

மிதுனம் : உறுதியான முடிவு எடுப்பீர்கள். சகோதரர்கள் உதவி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் பிரச்சினை வரும். உடல்ஆரோக்கியம் சீராக இருக்கும். திங்கட்கிழமை பணம் வரும். சமையலுக்கு தேவையான மின் சாதனங்களை வாங்குவீர்கள்.

பரிகாரமாக ஒம் நமோ நாராயணாய என 108 முறை சொல்லுங்கள்.

கடகம் ராசி

கடகம் : பயணங்கள் இருக்கும். தாயார்க்கு மருத்துவ செலவுகள் இருக்கும். எதையும் எளிதாக சமாளிப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் எளிதாக முடியும்.வீடு கட்ட வேலைகள் உடனே தொடங்குவீர்கள். மகன் திருமண செய்தி வரும். எதிர்பாராத பணம் வரும்.

Also Read  மேஷம் முதல் கன்னி வரை இந்த வாரம் – (டிசம்பர் 07 – டிசம்பர் 13)

பரிகாரமாக விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கேளுங்கள். தொழுநோயாளிகளுக்கு உதவுங்கள்.

சிம்மம் ராசி

சிம்மம் : தடைபட்ட பிரச்சினைகள் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் எதிர்பார்தவர்களுக் நல்ல செய்திகள் வரும். மனைவிக்கு நோய் வரலாம்.குடும்பத்தில் அனுசரனையாக போகவும். உத்தியோக வழியில் ஏற்றங்கள் இருக்கும்.பெரிய பதவியில் உள்ளவரின் நட்பு கிடைக்கும்.

பரிகாரமாக கந்த சஷ்டி கவசம் படியுங்கள். ஏழைகளுக்கு உணவு பொருட்களை தானமாக கொடுங்கள்.

கன்னி ராசி

கன்னி : சாதக பாதகங்கள், அலைச்சல், பயணங்கள்,வரவு செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். வாக்கு வாதங்கள் வேண்டாம். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் குணமாவார்கள். மாமனார் வழியில் லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அனுசரித்து செல்லவும்.

பரிகாரமாக லட்சுமி யை வழிபடுங்கள்.

ஜோதிடர் பேய்குளம் : முருகன்