என்னடா இது, ராமனுக்கு வந்த சோதனை! வம்பளந்தான்..!

என்ன மணியா…. ஆடி அம்மாவாசைக்கு ஆப்பு…. அடிச்சுடுவாங்க போல இருக்கே…!

யாருக்கு சபரி… ஆப்பு…!?!

என்ன மணியா தெரியாத மாதிரி கேக்குற…. ஆடி அமாவாசைக்கு கொரோனா லக்டவுன்னு… போட்டுட்டா யாரும் திதி.. தர்ப்பணம்  குடுக்குறதுக்கு….. ஐயரைத் தேடி ஆறு குளம் அப்படின்னு போக மாட்டாங்க….. அப்போ அங்க ஐயருக்கு பிசினஸ் அவுட்டு தானே..??

அடப்பாவி சபரி உனக்கு புத்தி ஏன் இப்படி  போகுது… ஐயர் வகுத்துலே அடிச்சா உனக்கு என்னய்யா சந்தோஷம்..!

ஆமா மணியா இத்தனை ஆண்டு காலமாக ராமன் இந்தியாவுலே அதுவும் அயோத்தியிலே பொறந்தவன்னு இந்த அய்யமாறுக சுத்து சுத்துன கதை சுத்திகிடே… இருந்தாங்க இல்ல…!


இப்ப பாத்தியா ராமர் இந்தியனே இல்லையாம்மா அந்த ஆளு நேபாள்ல பொறந்தவருன்னு  அந்த நாட்டு பிரதமரே சொல்லிட்டாருல்ல..

ஆமா சபரி அந்த ஆளு ராமனை நேபாளி அப்படின்னு சொல்லட்டும்… நீங்க ராமனை கூர்க்கா அப்படின்னு சொன்னாலும் சொல்லுவீங்க…..ஆமா… ராமர் பிறந்த இடம் எங்கேனு கேட்டா? என்ன சொல்லுவாரு.. ஓலி….

ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாடியே உங்க கூட்டத்து ஆளுக நேபாள், நேபாள் மெயின் ரோடு,  நேபாள் முட்டு சந்துனு அட்ரஸ் சொல்ல போறாங்க பாரேன்..! சரி அமாவாசைக்கும்… ராமனுக்கும் என்னய்யா சம்மந்தம்..!! உங்க தளபதி மாதிரியே சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதையாவது பேசு…!

Also Read  நீலி கண்ணீர் எதற்கு? தமிழ் நாடு சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் கேள்வி !

இப்ப எதுக்கு மணியா தளபதியை இதுக்குள்ள இழுக்குற…!

என்னையா சபரி நீ மட்டும் அமாவாசைக்கும்… ராமனுக்கும் முடிச்சு போட்டு பேசலாம்…!
விட்டா கிருஷ்ணனை துபாயிலே பிறந்தவருன்னு பேசலாம்…..
ஆனா.. நான் எதுவும் பேசக் கூடாதா…? அடுத்தவங்க மனச புண்படுத்தி பேசறதுலே உங்க கூட்டத்துக்கு நிகர் நீங்கதான்….. பாரு இப்போ கருப்பாடோ… கருப்பு கூட்டமோ அப்படின்னு ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு….

அது தமிழ் கடவுள் முருகனையே கண்டபடியா பேசிட்டு இருக்கு, கிடைக்கிற நாலு ஓட்டு கூட உங்களுக்கு கிடைக்காமல் போகட்டும்…

மனியா உன் சாபம் எல்லாம் எங்களை ஒன்றும் பண்ண முடியாது…!

சரி என் சாபம்…. உங்களை ஒன்னும் பண்ண முடியாது தான்….. ஆரம்ப காலத்துல விநாயகர் சிலையை போட்டு ஒடச்சிங்க… இப்போ முருகனை வம்புக்கு இழுக்கிறீங்க…. நாளைக்கு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நகந்து போயி… கிராமத்து குலசாமியையே என்ன சேதின்னு என்று கேட்டாலும் கேட்பீங்களே..!

ஆமா மணியா நாங்க பகுத்தறிவோடு பேசறது உன்ன மாதிரி ஆளுகளுக்கு பிடிக்காது…!

அடேங்கப்பா.. அறிவாளி பகுத்தறிவாளி… ராமனுக்கும் ஐயருக்கும் என்னய்யா சம்பந்தம்…?

என்ன….. மணியா ராமனையும் கிருஷ்ணனையும் ஐய்யருகதானே தலையிலே தூக்கி வச்சுக்கிட்டு ஆடிட்டு இருக்காங்க..?

Also Read  ஆ. ராசா போன்றவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்! கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி

ஐயா பகுத்தறிவாதி சபரி…. நான் கேட்கிற ரெண்டு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு… ராமன் ஐய்யரா…? ராம காவியம் எழுதினரே அவரு ஐய்யரா..? கிருஷ்ணன் ஐய்யரா இல்ல மகாபாரதம் எழுதின அந்த ஆசாமி அய்யரா….?

மணியா நீ ஏதோ இப்போ வில்லங்கம் பண்ணப் போறேன்னு மட்டும் தெரியுது நான் வரேன்..!