திருவாரூர் மாவட்டம் பின்னத்தூர் ஊராட்சி ஏழாவது வார்டு குடிநீர் தட்டுப்பாட்டை தீர்த்த உறுப்பினர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை ஒன்றியம்… பின்னத்தூர் ஊராட்சி 7வது வார்டு சோத்திரியம்பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு குடிநீர் வசதி இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை அதை ஏழாவது வார்டு உறுப்பினர் ரமேஷ் தீவிரமாக கவனித்து வந்தார்.

பின்னத்தூர் ஊராட்சி மன்ற சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆயிரம் லிட்டர் டேங்க் அமைத்து பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக அமைத்து கொடுத்தார்.

மேலும் வெள்ளம் தாங்கி பகுதியில் ஏழை மக்களுக்கு 30 நபர்களுக்கு மத்திய அரசு 12000 நிதியுடன் கூடிய கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்

Also Read  தூத்தூர் ஊராட்சி - அரியலூர் மாவட்டம்