ஆன்லைன் வகுப்பு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது மார்ச் 24ம் தேதி நடந்த பிளஸ் 2 தேர்வை சில மாணவர்கள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.  விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை வரும் 27ம் தேதி நடத்தப்படும். மாணவர்கள் படித்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன என்றார். மேலும், 12-ம் வகுப்பில் மீதமுள்ள ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. 12-ம் வகுப்பில் எஞ்சிய தேர்வை எழுதாதவர்களை எப்படி தேர்ச்சியடைய செய்ய முடியும்

Also Read  இளதூர் ஊராட்சி - தென்காசி மாவட்டம்