ஒரு ஓட்டில் தோற்ற ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6 ஆம் தேதி, 9 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் தேர்தல் நடத்தப்பட்டது. 6 ஆம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத ஓட்டுகளும், 9 ஆம் தேதி நடந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சியில் டி. ரமேஸ்குமார் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி் வகித்தார். நெஞ்சுவலியால் அண்மையில் ரமேஸ்குமார் உயிரிழந்தார். இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,150 வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் 3 பேர் போட்டியிட்டனர். இதில் மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவி கன்னியம்மாள் 423 வாக்குகளும், கடல்மணி என்ற கதிரவன் 424 வாக்குகளும், சத்தியநாதன் 137 வாக்குகளும், 5 வாக்குகள் செல்லாத வாக்குகள் என மொத்தம் 989 வாக்குகள் பதிவாகின. இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடல்மணி என்ற கதிரவன் வெற்றி பெற்றார்.

Also Read  அந்தநல்லூர் ஊராட்சி - திருச்சி மாவட்டம்