கவிஞர் கா.மு.ஷெரீப்பின் புகழ்பெற்ற திரைப்பாடல்கள்.!

பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கா.மு.ஷெரீப். இவரது 27-வது நினைவு நாளை (7- ந்தேதி) முன்னிட்டு அவரைப் பற்றிய சில சுவையான நினைவுகள் காண்போம்.!

1914- ம் ஆண்டு கீழத் தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம் என்ற கிராமத்தில், காதர்ஷா ராவுத்தர்-பாத்துமா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ஷெரீப்.

5 வயது முதல் 14 வயதுவரை, ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றார். இலக்கணத்தையும் இலக்கியங்களையும் ஆர்வமாய் கற்றார். ஆதலால், சிறுவனாக இருந்தபோதே, கவிதை இயற்றும் திறன் பெற்றிருந்தார்.

நிறைய நூல்களை எழுதி, பதிப்பகம் நடத்தி, பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய ஷெரீப், திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார்.

400-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். அவரது முதல் பாடல் இடம்பெற்ற படம் ‘பொன்முடி’.

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா.?

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, பொன்னான வாழ்வு மண்ணாகிப் போனால், உலவும் தென்றல் காற்றினிலே, போன்ற பல பாடல்கள் இன்னும் காலம் போற்றும் வண்ணம் ஒலித்துக் கொண்டேதான்
இருக்கிறது.

Also Read  பாடகர் சினேகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பெண் தெய்வம், புது யுகம் படங்களுக்கு வசனத்தையும் எழுதினார்.

கவிஞர் கா.மு.ஷெரீப் ஏன் மற்ற கவிஞர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார் தெரியுமா.?

அவர் யாரிடமும் வாய்ப்பு கேட்டு நின்றதில்லை, பாடல்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று நிர்ணயித்ததில்லை.

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அசைவம் உண்பதில்லை. மொத்தத்தில் சினிமா பாடலாசிரியராக இருந்தாலும், கடைசி வரையிலும் அவர் ஒரு சினிமாக்காரராக இருந்ததில்லை என்பதே
கண்ணிய கவிஞர் கா.மு.ஷெரீப்பின் தனித்துவம்.