மூத்தவர்கள் மரக்கன்று நட இளையவர்கள் தண்ணீர் ஊற்றுகிறார்கள்

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பலகாரன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கட்டகாளைபட்டியில் அரியவகை மரங்கள் இன்று அழிந்து விட்டன சில மரங்கள் அரிதாக காணப்படுகிறது.

மேலும் இதை பாதுகாக்கும் வகையில் சில தினங்களுக்கு முன் ஊர் இளைஞர்களால் 16 வகை அரிய மரக்கன்றுகளை ஊரணிகரையை சுற்றி நட்டனர் அதற்கு தினமும் நீர் ஊற்றும் வேலையில் ஊர் சிறுவர்-சிறுமியர்கள் செயல்படுகின்றனர் என்பதை பார்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறுகிறார்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள். இந்த அருஞ்சேவையை செய்து கொண்டிருக்கும் இந்த இளம் பட்டாளத்திற்கு நமது தளத்தின் சார்பாக பாராட்டுக்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

செய்தியாளர்: விஜய் மேலூர் மதுரை.

Also Read  குறவகுடி ஊராட்சி - மதுரை மாவட்டம்