போடி தொகுதியில் பட்டுவாடா முடிந்தது

2021 ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என ஆணையம் அறிவித்துவிட்டது.

தேர்தல் நடைமுறை நேற்று மாலை முதல் அமுலுக்கு வந்து விட்டது. பல்வேறு விதிகளை ஆணையம் நடைமுறைப்படுத்தும் என ஆணையர் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்,அதை கண்காணிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கூறினார்.

அந்த கூற்றை உண்மையாக்கும் விதமாக போடி தொகுதியில் பணமாக இரண்டாயிரமும்,பரிசுப் பொருட்கள் பலவும் வழங்கப்பட்டுள்ளதாக தேனி பத்திரிகையாளர் நம்மிடம் கூறினார்.

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை விசாரிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

நடுநிலையோடு ஆணையம் செயல்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-வம்பளந்தான்-

Also Read  கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரோனா தொற்று - கலக்கத்தில் தொண்டர்கள்