மக்கள் பணியில் பத்துரூபாய் இயக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளகுட்டை ஊராட்சியில்உள்ள தீர்த்தகிரி வலசை பகுதியில் ரோட்டின் குருக்கே மின் ஒயர்கள் கீழே தொங்கியபடி உள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களுக்கும் மிகவும் சிரமமாக இருந்தது.தமிழ்நாடு மின்சார வாரியம் உடனடியாக சரிசெய்ய வேண்டுமென கடந்த 27.05.2021ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டது..

இக்கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை களத்தில் இறங்கிய சிங்காரப்பேட்டை மின்சார துறை அதிகாரிகள் நேரடி பார்வையில் (AE,Li,போர்மேன்,Line man) ஊழியர்கள் அனைவரும் இன்று சம்மந்தபட்ட இடத்தை ஆய்வுசெய்து உடனடியாக மின்கம்பம் நடப்பட்டது.வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமமின்றி செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கினைப்பாளர் அ.மணி,வெள்ளகுட்டை ஊராட்சிமன்ற தலைவர் சரஸ்வதிவிஜயன் ஆகியோர் மின்கம்பம் நடப்பட்ட இடத்தை ஆய்வுசெய்தனர் வெள்ளக்குட்டை ஊராட்சி மக்கள் சார்பாகவும்,பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் சிங்காரபேட்டை அவர்களுக்கு நன்றி தெறிவித்துள்ளனர்.

Also Read  பொருந்தலூர் ஊராட்சி - கரூர் மாவட்டம்