ஒரே நாளில் பஞ்சாயத்து தலைவர் செய்த பணிகள்

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்கிராமம், சூரங்குடி, அருணாச்சலபுரம் (எ) மாயம்பாறையில் ஒருநாள் முழுவதும்  ஊராட்சி தலைவர் சிவஆனந்த்BE,MBAbநிறைவேற்றிய சில பணிகளின் பட்டியல்..

1.புதுக்கிராமத்தில் தாமிரபரணி தண்ணீர் நீரேற்றும் குழாயில் மரத்தின் வேர் நுழைந்து ஏற்பட்டிருந்த அடைப்பு குடிநீர் வடிகால் வாரிய(TWAD Board) ஊழியர்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் தாமிரபரணி குடிதண்ணீர் ஊர் மக்களுக்கு வழங்கப்பட்டது.

2.புதுக்கிராமத்தில் உள்ள இரு நீர்த்தேக்கத் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டன.

3.புதுக்கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் வாறுகால்கள் சுத்தம் செய்யப்பட்டு கழிவுகள் ட்ராக்டர் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்ட பணியை ஆய்வு செய்தேன்.

4.புதுக்கிராமம் செவன்த்டே தேவாலயம் அருகில் ஏற்பட்டிருந்த குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு வடக்குத் தெருவில் தடைப்பட்டிருந்த நீர்வினியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது.

5. மறவர், யாதவர் சமுதாயத்தினர் சேர்ந்து பயன்படுத்தும் பொது மயானம் ஆய்வு செய்யப்பட்டு அதற்கு தேவையான சாலை வசதி, நீர், மின்விளக்கு வசதிகள், காத்திருப்போர் கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று உறுதியளித்தேன்.

6. அருந்ததியர் சமுதாயத்தினருக்கான மயானம் ஆய்வு செய்யப்பட்டு அதற்கு தேவையான சாலை வசதி, எரிமேடை, நீர், மின்விளக்கு வசதிகள், காத்திருப்போர் கூடம் அமைத்துத் தருவேன் என்று உறுதி அளித்தேன்.

Also Read  கிடாரிபட்டி ஊராட்சி-மேலூர் சட்டமன்ற தொகுதி

7. பயன்பாடற்றுக் கிடக்கும் நீராதாரங்கள் கணக்கிடப்பட்டு அவற்றை சரிசெய்யும் வழிகள் ஆராயப்பட்டன.

8. நல்லிகள் இல்லாத நீர் வழங்கும் குழாய்கள் கணக்கிடப்பட்டு ஊர் முழுவதும் ஒரே சீராக நீர் வழங்கும் வகையில் அனைத்து குழாய்களிலும் ஒரே மாதிரியாக நல்லி மாட்டித் தருவதாக உறுதியளித்தேன்.

9.அருணாச்சலபுரம் (எ) மாயம்பாறையில் ஆழ்துளைக்கிணறு மோட்டார் இயங்குவதற்கு தேவையான ஸ்டார்ட்டர் பொருத்தப்பட்டு தடைப்பட்டிருந்த நீர் வினியோகம் சீர்செய்யப்பட்டது.

10. சூரங்குடியில் பள்ளிக்கு அருகில் ஏற்பட்டிருந்த குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.

11. சூரங்குடி பேருந்து நிலையம் அருகிலுள்ள சின்டெக்ஸ் டேங்கில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய நல்லிகள் மாட்டப்பட்டன.
கோவில் அருகில் உள்ள நீர் வழங்கும் குழாயில் தண்ணீர் வீணாவதை தடுக்க புதிய நல்லி பொருத்தப்பட்டது.

12.சூரங்குடி தேவேந்திரகுல வேளாளர் சமுதாய குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுக் கிணற்றில் மோட்டார் சரிசெய்யப்பட்டு பல ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நீர் வினியோகம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்றார்.

மத்திய, மாநில நிதிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய இதுபோன்ற சிறிய,வறிய ஊராட்சிகளில் கூட முயற்சித்தால் முடியும் என்பதை நிரூபித்து காட்டி உள்ள இந்த படித்த இளைஞரின் பணியை பாராட்டுவோம். இளைஞர்களின் கையில் எதிர்காலம் என்பது உண்மை என்பதை உலகிற்கு உணர்த்தி உள்ளார் இந்த ஊராட்சி தலைவர் S.சிவஆனந்த் BE,MBA.

Also Read  தென்காசி மாவட்டம் ஈச்சந்தா ஊராட்சியின் புதிய தலைவர்