சுமால் மதர் கம்மிங்…பல பேரு டம்மி – வம்பளந்தான்

வம்பளந்தான் முக்கு

மணியா….. நம்ம தளபதிவுட்ட அறிக்கைய பாத்தியா..?

என்ன அறிக்கை விட்டுட்டாரு உங்க தளபதி….?

கிருஷ்ணகிரி தருமபுரியிலே வெட்டுக்கிளியின்னு எச்சரிக்கை அறிக்கை விட்டு இருக்காரு மணியா..

அட நீ ஒண்ணு சபரி… இது நம்ம வாக்கிய பஞ்சாங்கத்தலேயே எப்பவோ எழுதி வச்சிட்டாங்க….. இந்த மாசத்துலே வெட்டுக்கிளி அட்டகாசமுன்னு.. நீ ஒருத்தன் தான் சபரி…  நம்ம தளபதிய நல்லா ஃபாலோ பண்றே.. தர்மபுரி கிருஷ்ணகிரி கொரோனாவுலே கிரீன் சர்டிபிகேட் வாங்குச்சுல்ல, இந்த மேட்டர்  வெட்டுக்கிளிகளுக்கு தெரிஞ்சு தான் வந்திருக்காம்….

 

மணியா இந்த கிண்டல் தானே வேணாங்கிறது…‌‌

அட போப்பா சபரி…. இந்த வெட்டுக்கிளி மேட்டர் நம்ம வாக்கிய பஞ்சாங்கத்தில் எப்பயோ போட்டுட்டா

மணியா நான் எது சொன்னாலும் அதுக்கு எடக்கு மடக்கா பதில் சொல்லடி உனக்கு தலையே வெடிச்சிடும் இல்லையா…?

அப்படியில்ல சபரி….. இது வழக்கமா வர லோக்கல்  வெட்டுக்கிளிதானாம், இதுக்கு பயந்துக் வேண்டாமுன்னு நம்ம விவசாய செக்ரெட்டி சிங்கு ஒரு அறிக்கை விட்டார் பாத்தியா…! அந்த அறிக்கையை எல்லாம் நீ படிச்சிருக்க மாட்டியே….

அப்படியா….?

என்ன அப்படியா….!! நம்ம லோக்கல் கிளியாலே எந்த பிரச்சினையும் வராது… பாகிஸ்தான் பக்கமிருந்து வர வெட்டுக்கிளி தான் பிரச்சனை அதுவும் நம்ம தமிழ்நாடு பாடரை  தாண்டி வராது. அதெல்லாம் பாரின் பக்கம் போயிடும்மின்னு இன்னும் விரிவா சொல்லி இருக்காரு… சபரி

Also Read  கொரோனாவை கற்பித்தவன் காட்டுமிராண்டியா? வம்பளந்தான்!

எப்படியோ மணியா… நம்ம தமிழ்நாடு தப்பிச்சுகிச்சு….. அப்படித்தானே…?

அது என்னமோ உண்மைதான் சபரி
வெட்டுக்கிளி இங்க வந்துச்சுன்னா நம்ம சாப்பாட்டுல கைய வச்சுருக்கும்…. இப்ப என்னடான்னா அதுக வடக்கே சப்பாத்தியிலே கையவைக்குது….. பாவம் அந்த ஜனங்க…

ஆமா மணியா நீ பாவமமின்னு சொன்னதால ஒரு மேட்டரு…

அப்படி என்ன பெரிய மேட்டர்….

பப்ளிக்கா பொது இடத்துல சரக்கு அடிக்க கூடாதுன்னு நம்ம கவர்மெண்ட் ஒரு உத்தரவு போட்டு இருக்கு பாத்தியா…

சரியாத்தானே சொல்லியிருக்கு சபரி…

இல்ல மணியா திரும்ப டாஸ்மாக் பார் தொறக்க நைஸா போட்ட உத்தரவு மாதிரி இருக்கு….

நல்லதுதானே சபரி

என்ன நல்லது வெளியே எங்கேயாவது மரத்தடியில உட்காந்துகிட்டு அஞ்சு ரூபா முறுக்கு, 50 காசு டம்ளர், ஒரு ரூபாய்க்கு வாட்டர் பாக்கெட் வாங்கி தண்ணியடிக்கிறது எவ்வளவு மிச்சம்…

இதையே கடைக்கு போனா சரக்குக்கு சைடிஸ் முப்பது ரூபா, 50 காசு டம்ளர் 10 ரூபா, ஒரு வாட்டர் பாக்கெட் 10 ரூபா, மொத்த பட்ஜெட்ட பாரு…. மணியா.. நீ சப்பாத்தி சாப்பிடறவன் பாவம்மிங்கற நான் சரக்கு அடிக்கிறவன் பாவம்மின்னு சொல்றேன்… புரியாம பேசாத மணியா…..

சபரி டாஸ்மாக் பார் மூடுனா, கரை வேட்டி லோக்கல் தலைகள் கையில காசு இல்லாம  போய்விடும்…. அவங்க பாவம் இல்லையா சபரி…

Also Read  எல்லாம் சரியாதான் போகுதா? வம்பளந்தான்!

என்ன மணியா லோக்கல் தலைகள் என்ன…? டாஸ்மாக் பார்லே டம்ளரா தழுவுகிறாங்க…

அடப்பாவி இது தெரியுமா..? தெரியாதா..? உனக்கு ஒவ்வொரு டாஸ்மாக் பார் நடத்தரவங்க, லோக்கல் தலைகளுக்கு ஏரியாவ பொருத்து தினமும் 1000 முதல் 2000 ரூபாய் மாமூல் கொடுத்து தான் ஆகணும் இது தமிழ் நாட்டுலே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எழுதாத சட்டம்…சபரி

சுமால் மதர் செப்டம்பர்ல வெளியே வந்தபிறகு ஆளும்கட்சில பெரிய மாற்றம் வரப்போகுதாம்..

ஐயா சாமி….. மணியா…!!!
நமக்கு எதுக்கு இந்த அரசியல் வம்பு….. எக்கு தப்பா பேசி எழுதறவங்க எல்லாத்தையும் புடிச்சு குண்டாசுலே போட்டுக்கிட்டு இருக்காங்க….

மணியா ஜாக்கிரதை …