ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத்தின் மாநில பொருளாளர் வேண்டுகோள்

அன்புக்குரிய ஊராட்சி செயலாளர் உறவுகளுக்கு வணக்கம்

நமது மாநில மைய அறிவிப்பின்படி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு திருச்சியில் ஒரு பிரமாண்ட கட்டிடம் கட்டுவதற்கு ஒரு பெரும் முயற்சியை துவங்கி அதற்கான பணிகளில் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டு வருகிறோம்.

.நிறைய ஊராட்சி செயலாளர் உறவுகள் தன்னுடைய குடும்ப சூழல் மற்றும் நிதி சூழலையும் கருதாமல் தன்னலமற்ற இந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் கட்டுவதற்கு தொகைகளை வழங்கி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக ஒவ்வொரு ஒன்றிய தலைவரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளுங்கள்.

ஒன்றிய நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்களிடம் தனிதனியாக பேசுங்கள்.

உதாரணத்திற்கு ஒரு ஒன்றியத்தில் 45 ஊராட்சி செயலாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 45 ஊராட்சி செயலாளர்களிடமும் ஒன்றிய தலைவர் நேரடியாக போனில் பேச வேண்டும்

அதேபோல் மண்டல (Zone) ,அளவில் உதாரணத்திற்கு ஒரு மண்டலத்தில் 7 ஊராட்சிகள் இருக்கிறதென்றால் மண்டலத்திற்கு ஒருவரை பொறுப்பாக்கி தொகை வசூலித்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் .நீங்கள் பெறுகின்ற தொகையை உடனடியாக நமது மாநில மைய கணக்கில் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேபோல் இந்த தொகைகள் அனைத்துக்கும் கணக்கு வழக்குகள் உள்ளன. முறையான கணக்கு வழக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது அதே போல் நீங்கள் பெறுகின்ற நன்கொடைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படும்.

Also Read  ஒரு ஊராட்சி செயலரின் உள்ளக்குமுறல்

அதேபோல் நன்கொடைகள் பெறும்போது உரிய ரசீதுகளை வழங்கி நன்கொடைகளைப் பெறுங்கள் என்றும் இந்த பணியினை வருகின்ற இரண்டொரு நாட்களில் சிறப்பாக முடித்து கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

*K.மகேஸ்வரன்*                              மாநில பொருளாளர்,                      TNPSA SRG DGL 09/20