மாநில அளவிலான முதற்கட்ட கவன ஈர்ப்பு போராட்ட அறிவிப்பு- TNPSA

மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை

ஊரகவளர்ச்சித்துறையின் ஆணிவேராம் ஊராட்சி செயலர்களுக்கு துறையில் கொடுக்கப்படும் அதீத பணிச்சுமைகளை களையும் நோக்கிலும்,மன அழுத்தங்களை குறைக்கும் நோக்கிலும்,நெடுங்காலமாக கோரிவருகின்ற கோரிக்கைகளின் மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அளவில் எண்ணிலடங்கா கோரிக்கைகள் மாநில மையத்தை நோக்கி வரப்பெற்றுள்ளன.

*தமிழக அரசிற்கு ஆதரவாக என்றும் இருந்துவரும் நமது அமைப்பு தற்போது அலுவலர்களின் உயர்அழுத்தம் காரணமாக கவன ஈர்ப்பு நடவடிக்கைக்கு செல்ல வேண்டியுள்ளது.எனவே ஏகோபித்த உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இரண்டுகட்ட இயக்க நடவடிக்கை மாநிலம் தழுவி மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(1)ஊராட்சி செயலர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் எண்ணிலடங்கா பணி அழுத்தங்களை சந்தித்துவருகின்றனர்..ஒரே பணியாளர் ஒரேநேரத்தில் 20 க்கும் மேற்பட்ட பணிகளை செய்யவேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது.இதனால் ஊராட்சி செயலர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சாலை விபத்துக்களை சந்திப்பதும்,கடும் மன அழுத்த நோய்க்கு ஆளாவதும்,பணியிடத்திலிருந்து மன நிம்மதி தேடி குடும்பத்தை நிர்கதியாக தவிக்க விட்டு வீட்டினை விட்டு வெளியேறுவதும்,இதய அடைப்பு,ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால் உயிரினை இழப்பதும் மிக அதிகரித்துள்ளன..எனவே ஊராட்சி செயலரின் உடல்நலம்,மன நலம் காக்க உடனடி நடவடிக்கை தேவை.இப்போதுள்ள பணி நெருக்கடியை அரசு முற்றிலும் குறைத்திட நடவடிக்கை எடுத்தல்*

Also Read  பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

*(2)பல்வேறு மாவட்டங்களில் பல ஊராட்சி தலைவர்கள் ஊதியம் அனுமதிப்பதில் மிக தாமதம் செய்வதாலும்,பல தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு ஊதியம் அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டுவதாலும் ஊராட்சி செயலர்களின் நெடுங்கால கோரிக்கையான கருவூலம் மூலம் ஊதியம் பெறும்வகையில் உடனடியாக உத்தரவினை பிறப்பித்து ஊராட்சி செயலர்களுக்கு புத்துணர்வையும் நம்பிக்கையும் ஏற்படுத்துவதுடன் மாத ஊதியம் பெறுவதனை உறுதி செய்தல்*

*(3)ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புதல்,புதிய பணிவிதிகள் அரசாணையை வெளியிடுதல்,ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல்,பென்சன் திட்டத்தில் சேர்த்தல் ஆகிய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற கேட்டல்*

*எனவே மேலே கண்ட கோரிக்கைகளை முன்வைத்து முதற்கட்ட கவன ஈர்ப்பு இயக்க நடவடிக்கையாக எதிர்வரும் 12.09.2022 திங்கள் முதல் 14.09.2022 புதன்வரை மொத்தம் 03 நாட்கள் தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஊராட்சி செயலரும் ஊதியமில்லாவிடுப்பை துய்ப்பார்கள்*

*அடுத்தகட்டமாக தொடர் விடுப்பு நடவடிக்கை முழு அளவில் மேற்கொள்ளப்படும்!*

*இந்த நடவடிக்கையை அனைத்து ஊராட்சி செயலருக்கும் உணர்வுபூர்வமாக கொண்டு சென்று மாநில மையத்தால் வெளியிடப்பட உள்ள விடுப்பு கடிதத்தில் கையொப்பம் இட்டு உயர் அலுவலரிடம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்*

*மேலும் இந்த காலகட்டத்தில் எந்தவித பணியையும் மறைமுகமாகவோ அல்லது மாற்றுநபர்களை வைத்தோ மேற்கொள்ளக்கூடாது எனவும் கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்?

*TNPSA-SRG-DGL-09-20*
*மாநில மையம்*
*9386666666*