மாநில நிதி வரவு – ஊராட்சி தலைவர்கள் கதறல்

மாநில நிதி (SFC)

ஊராட்சிகளுக்கான மாநில நிதி ஏப்ரல்,மே,ஜூன் என மூன்று மாதங்களுக்கு அந்தந்த ஊராட்சி கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

வருமானமே இல்லாத ஊராட்சிகள் இந்த நிதி மட்டுமே நம்பி செயல்படுகிறது. அப்படிப்பட்ட நம்பிக்கை பொய்த்து போனதால், இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கதறல்.

இதோ..சில சாம்பிள்

* இதுவெல்லாம் ஒரு நிர்வாகம்

* கேவலமான ஒரு நிர்வாகம்

* ஊராட்சி நிர்வாகம் என்றால் என்ன என்பதை அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவே இல்லயே

* இதுல வீட்டுக்கு வீடு தேசிய கொடி ஏத்து அப்புறம் ஊராட்சியில் செஸ் போட்டி நடத்தவாம்

* ஊராட்சி பொதுமக்களின் அடிப்படை வசதி எப்படி செயல்படுத்த முடியும் இந்த கிராமபுற மக்கள் மீது அக்கறை என்பது இருக்கா……
இந்த அவலநிலை மாறுமா……
இந்த ஊராட்சி நிர்வாகம் தேவையில்லையுனூ கருதிகிறாதா இந்த விடியா அரசு……
ஊராட்சி நிர்வாகத்திற்கு விடியல் வருமா..

* ஐயோ சொக்கா… கடன் கொடுத்தவன் வீட்டுக்கு வந்துருவானே… இப்போ பணம் வந்துரும்னு சொன்னேனே… வரலியே… மோட்டார் வேலை பாத்தவன், பல்பு கடன் கொடுத்தவன், பைப் லைன் வேலை பாத்தவன் அம்புட்டு பேரும் வீட்டுக்கு வந்துருவானே.. நான் என்ன செய்வேன்.. எங்கே போவேன்… சொக்கா… ரெண்டு நாளா பேஞ்ச மழையில ஊரு பூரா தண்ணி தேங்கி கிடக்கு அத வெளியேத்தணும் இல்லையினா ஊருக்காரன் கொண்டுருவான்… இப்போ என்ன செய்ய… சொக்கா நான் கத்துறது உனக்கு கேக்கலியா… உனக்கு கேக்காது.. கேட்டா ஏன் இந்த நிலைமை… 😭😭😭😭

Also Read  நிதியை வழங்குங்கள் - ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு வழியுறுத்தல்

* ஒரு குடும்பத்தை நடத்துற அரசு ஊழியனுக்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சத்துக்கும் மேல் . ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்களை தன்குடும்பமாக கவனிக்கும் அடிப்படை நிர்வாக செலவினங்களுக்கு இந்த பணம் அனுப்பியது எவ்வகையில் நியாயம் இந்த பிச்சைக்காரன் பணம் தலைவர்களுக்கு தேவையில்லேயே…

இப்படிப்பட்ட கதறல் குரல்கள் அதிகமாக கேட்கிறது.