மாநில நிதிக்குழு மானிய நிதி – ஊரக அனைத்து பணியாளர் சங்கம் கோரிக்கை

சார்லஸ் ரெங்கசாமி

ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி எழுதிய கோரிக்கை மனு…

 

பெறுநர்:- மதிப்புமிகு இயக்குநர் அவர்கள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பனகல் மாளிகை
சென்னை

பொருள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானிய நிதியை வழங்க கோருதல் தொடர்பாக

தமிழகத்திலுள்ள சுமார் 12525 ஊராட்சிகளுக்கு கடந்த  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான மாநில நிதிக்குழு மானிய நிதி இன்றளவும் வழங்கப்படவில்லை.

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் துப்புரவு பணியாளர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர் தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மாத ஊதியம் வழங்க இயலவில்லை

மேலும் தற்சமயம் கிராம ஊராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் பேரிடர் மேலாண்மைப் பணிகள் மற்றும் தடுப்பூசி முகாம் நடத்திட நிதிஇல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது

தமிழகத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளில் சுமார் 8000 க்கும் மேலான ஊராட்சிகள் மாநில நிதிக்குழு மானிய நிதியை நம்பியே உள்ளன.

ஆகவே நிலுவையிலுள்ள  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான மாநில நிதிக்குழு மானிய நிதியை வழங்கிட ஆவண செய்யுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Also Read  தன்னிலை விளக்கம் சொல்லும் மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரி

ஆர் சார்லஸ்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்துபணியாளர்கள் சங்கம்