வெங்கலகுறிச்சியில் கிராமசபையில் சிறப்பு தீர்மானம்

ராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர்ஊராட்சி ஒன்றியம்
வெங்கல குறிச்சி ஊராட்சி ஊராட்சிகள் தினம் நவம்பர் 1
கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி திரு அன்பு கண்ணன் அவர்கள் ,ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் முதுகுளத்தூர் திரு.மாடசாமி அவர்கள்,ஒன்றிய உதவிபொறியாளர் திரு .ஜம்பு முத்துராமலிங்கம்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டலம் 3திரு .ஜெய கார்த்திக்.மற்றும் கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

ஊராட்சியில்சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர் ஆகியோர்களுக்கு ஊராட்சி சார்பில் நற்சான்று வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அவர்கள் திருகரங்களால் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது

கூட்டத்தில் கிராம வளர்ச்சி மற்றும் சுகாதாரம் குடிநீர் பணி
மற்றும் வெங்கலகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது

முடிவு வில் ஊராட்சி செயலாளர்
திருமதி பொன்மணி அவர்கள்
நன்றி கூறினார்

Also Read  கொடுவிலார்பட்டி ஊராட்சி - தேனி மாவட்டம்