துணைத்தலைவர் இல்லா ஊராட்சிகள்- தீர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட கலெக்டர்

சிவகங்கை மாவட்டத்தில் துணைத்தலைவர் தேர்வு செய்யப்படாத  6 கிராம ஊராட்சிகளில் காசோலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள இயலாத நிலை குறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்,சிவகங்கை மாவட்ட மையம் சார்பாக கடந்த 15.05.2020 அன்று உயர்அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..

அதனை தொடர்ந்து அவ்வகை ஊராட்சிகளில் இணைக்கையொப்பமிட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அனுமதித்து மதிப்புமிகு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவினை பிறப்பித்து,அவ்வுத்தரவின் பார்வையில் தமது அமைப்பின் கோரிக்கை குறித்த விபரங்களை பதிவிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும்,திட்ட இயக்குநர் அவர்களுக்கும்,மதிப்புமிகு ஊரகவளர்ச்சி உதவி இயக்குநர்(ஊ)அவர்களுக்கும்,வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துள்ளது சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்.

மக்கள் பணியிலும்,நிர்வாகத்திலும் ஏற்பட்ட தொய்வை சரிசெய்திட அடித்தளமிட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்திற்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  சீனாவில் புதிய காய்ச்சல் புறப்பட்டு விட்டதாம்