எஸ்பிஐ வங்கியின் அதிரடி சலுகை

பாரத ஸ்டேட் வங்கி ( SBI )கடன் தள்ளுபடி அறிவிப்பு.

பாரத ஸ்டேட் வங்கியில பயிர்க்கடன், தொழில் கடன், கல்விக்கடன் வாங்கி நீண்ட காலமாக கட்டமுடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிற வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான மகிழ்ச்சியான நற்செய்தி.

ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தாமல் உள்ள வாரா கடன்களுக்கு வட்டி முழுவதும் தள்ளுபடி, அதோடு மிக முக்கியமாக இப்போ இருக்கிற அசல் தொகையில் 80 முதல் 90 % வரை தள்ளுபடி. இந்த திட்டத்தின் பெயர் *ரின் சமாதானம்.*

இது *இந்தமாதம் 31 ஜனவரி 2021 வரை மட்டுமே.*

ஒருத்தர் 1 லட்சம் பயிர்க்கடன் வாங்கி இது வரை பலவருடமா கடன் கட்ட முடியல னு வச்சிக்கிட்டோம்னா அவர் வெறும் 10000 முதல் 20000 காட்டினா போதும் அவரோட கடன்ல மீதி இருக்கிற வட்டி அசல் மற்றும் அனைத்து தொகையும் தள்ளுபடி செய்து கடன் கணக்கை முடிவுக்கு கொண்டு வரலாம்

அசல் 20 லட்சம் வரை இருக்குற அனைத்து கடன்களையும் இந்த திட்டத்து மூலமா முடிவு பண்ணலாம்.

கடன் கட்டாம வழக்கு நீதிமன்றத்துல நிலுவைல இருக்கக்கூடிய அனைத்து கடன்களையும் இது மூலமா நீங்க முடிவு செய்ய முடியும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனைத்து நீதிமன்றம் செலவுகளும் தள்ளுபடி செய்றாங்களாம்.

Also Read  அணைக்கரைப்பட்டி - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

இன்னொரு நற்செய்தி என்னனா விவசாயிகள் 30 நாட்கள் கழிச்சு அதே வங்கி கிளையில் மீண்டும் விவசாய கடன் பெறலாம்.

இதே போல கல்விக்கடன் மட்டும் இல்லாம பயிர்க்கடன், டிராக்டர்கடன், தொழில் கடன், சிறு தொழில் கடன்னு பல்வேறு நாள்பட்ட கடன்களுக்கும் இது பொருந்துமாம்.

நாமும் வங்கியில் விசாரித்து உறுதிபடுத்தினோம். அற்புதமான வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.