போராட்டத்திற்கு தயாராகும் சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

சேலம்மாவட்ட அவசர செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அனைத்துபணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் A.முருகன் தலைமையில் வாழப்பாடி கமலாலயம் அறக்கட்டளையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்த சக்திவேல் என்பவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியும்.வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது குறித்து மாவட்ட செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

1.வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சக்திவேல் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2.விலாரிபாளையம் ஊராட்சியில் எப்படி வேலைசெய்துவிடுவாய் என கேட்டு விலாரிபாளையம் ஊராட்சி செயலாளர் K.சிவசங்கரை கொலைமிரட்டல் விடுத்த சக்திவேலை கைது செய்யவேண்டும்.

3.வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் வன்முறை நடைபெற்றதால் ஊராட்சிசெயலாளர்கள் மத்தியில் குறிப்பாக பெண் ஊராட்சிசெயலாளர்கள் உள்ளடக்கியோரிடத்தில் அச்சுறுத்தல் உள்ளதால் ஒன்றிய அலுவலகத்திர்க்கு செல்வதை புறக்கணிக்க ஒருமனதாக தீர்மானிக்கபட்டது.

ஒன்றிய அலுவலகத்தில் தைரியமாக வன்முறையில் ஈடுபட்ட வேப்பிலைபட்டி ஊராட்சி செயலாளர் சக்திவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தியும் சங்க காழ்ப்புணர்ச்சி காரணமாக வன்முறையில் ஈடுபட்ட சக்திவேலுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இக்கூட்டம் கண்டனத்தை பதிவு செய்கிறது.

Also Read  முதலிபாளையம் ஊராட்சி 15வது நிதி குழு சிறப்பு கூட்டம்

4. கெங்கவல்லி துணைவட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆக பணிபுரியும் பெரியசாமி என்பவர் ஊராட்சி செயலாளர்களை
வாடா போடா என்று அநாகரீகமாகவும் தரக்குறைவாகவும் தரம் தாழ்ந்தும் பேசும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேற்படி தொடர்ந்தால் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இக்கூட்டம் தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்தகட்டமாக மாவட்ட அளவில் ஆர்பாட்டம்நடத்திட ஏகமனதாக தீர்மானிக்கபட்டது.

ஆரம்ப கட்டத்திலேயே தீர்வை ஏற்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நமது பத்திரிகை சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.