சேலத்தில் திரண்டு ஆர்பாட்டம் செய்த ஊரகத்துறை ஊழியர்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகம் எதிர்புறம் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு இன்று மாலை 04.30 மணிக்கு சீரோடும் சிறப்போடும் நடைபெற்றதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எனது பாசமிகு அண்ணன் எம். பழனிவேல் அவர்களும் மற்றும் இரு அமைப்பின் மாநில/ மாவட்ட /ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கணினி உதவியாளர்கள், மாவட்ட வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர், OHT இயக்குனர், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பெரும் திரளாக அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சேலம் மாவட்ட மையங்கள்.

Also Read  பெருகோபனபள்ளி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்