ஆர்.பி.உதயகுமார்- நல்லவரா…கெட்டவரா…

ஜெ.இறந்த பிறகு ஆட்சியின் தலைவராக பன்னீர் தலைமையில் பயணப்பட்டபோது, முதல் கலவரக் குரலை எழுப்பிய புண்ணியவான் உதயகுமார்.

நல்லா இருந்த ஆட்சியை நாசமாக செய்த விதை உதயகுமார். ஜெயின் சமாதியில்  சத்தியம் செய்து,கட்சியும் ஆட்சியும் ஒருவருக்கே என கலகம் செய்த முதல் குரல்.

ஆக…ஜெயின் ஆன்மாவை அசிங்கப்படுத்திய முதல் நபர். இப்போது ஜெயிற்கு கோவில் என்று அடுத்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.

சசிகலா விடுதலைக்கு பிறகு,சிறுசிறு குரலுக்கு பிறகு…அடுத்த அணு குண்டை வீசப்போவது இதே உதயகுமார் தான் என்று அசீரிரீ கேட்கிறது.

உதயகுமார் நல்லவரா…கெட்டவரா…

இந்த கேள்விக்கு பதில். சுயநலம் மிக்க அரசியல்வாதியின் ஆதாம் தான் உதயகுமார். செய்த பாவத்தை பணத்தை வைத்து போக்க முடியும் என முயற்சிக்கும் உதயகுமாருக்கு காலமே பதில் கொடுக்கும் என்றார் அதிமுகவின் உண்மையான தொண்டர் ஒருவர்.

Also Read  3-வது அணி உருவாக வாய்ப்பு - கமல் பரபரப்பு பேட்டி