ரைட்ல கை- லெப்ட்ல இன்டிகேட்டர்- நேரா போகும் வாக்களர்கள்

ரைட்ல கை- லெப்ட்ல இன்டிகேட்டர்- நேரா போகும் ஆட்டோக்காரன் என ஒரு திரைப்படத்தில் விவேக் கூறுவார். அதுபோலத் தான் தமிழக வாக்காளர்கள்.

2011,2016 என இரண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுகவை அரியணை ஏற்றியவர்கள் தமிழக வாக்களர்கள்.

வடமாநில ஊடகத்தாரர்களையும்,வடக்கில் இருந்து வரும் அதிகார மையத்தையும் எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளாத இனம் தமிழினம்.

தென்கோடி தமிழனுக்கும் உலக அரசியல் அத்துப்படி. காசு கொடுத்த கட்சிகளுக்கு அல்வா கொடுக்கும் அறிவாளிகள்.

தந்திடிவி போன்ற தமிழ் ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கியே பழக்கப்பட்டவர்கள். தொகுதிக்கு 200 பேர்களின் கருத்து கணிப்பு என உரக்க கூவுது தினத்தந்தி. 2  லட்சம் வாக்களர்களின் எண்ண ஓட்டத்தை 200 பேரிடம் அறிந்து கொண்ட அற்புத அறிவாளியாய் தந்திடிவி படம் காட்டி உள்ளது.

களத்தில் நின்று நாம் கண்ட ஒரு உதாரணம்.

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் கைப்பற்றுவாரம்.இது,தந்திடிவியின் கணிப்பு.

ஆனால்…சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்அம்பலம் பிறந்த தமராக்கி கிராமம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இரட்டை இலைக்கு வேட்டு வைத்துள்ளனர் அந்தப்பகுதி மக்கள்.

குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வழக்கறிஞர் மிக கணிசமான அதிமுக வாக்குகளை அறுவடை செய்துள்ளார்.

Also Read  தமிழக அமைச்சர்களின் தொடர்பு எண்கள்

இடதுசாரி வேட்பாளராக போட்டியிடுபவருக்கு அவர் சார்ந்த அகமுடைய சமூக வாக்குகள் மிகப் பெரும்பான்மையாக  பதிவாகி உள்ளது.

இப்படி…எப்படி கூட்டிக் கழித்து பார்த்தாலும் சிவகங்கையில் இரட்டை இலை துளிர்ப்பது கடினம். ஆனால், சிவகங்கையில் அதிமுக என தந்திடிவி தந்தி அடித்துள்ளது.

மே 2ம் தேதி யாருக்கு வெற்றி என்பதில் தெரிந்து விடும் கருத்துக் கணிப்பின் லட்சணம்.