தமிழ்நாடு ஓய்வுபெற்ற ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தஞ்சை K.மகேந்திரன் அவர்கள் தமிழக அரசிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது..
(1)கிராம ஊராட்சிகளில்- பணியாற்றிவரும் OHT ஆபரேட்டர்கள் ஓய்வு பெறும்போது வெறுங்கையோடு வீட்டிற்கு திரும்பிட வேண்டியுள்ளது..இந்த அவல நிலையை போக்கி மாத ஓய்வூதியம ரூ 5000 பணிக்கொடை ரூ 300000 வழங்கிட கோருகிறோம்!
(2)ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பதுடன்,ஓய்வு பெறும்போது கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% வழங்கிட கேட்டல்
(3)ஓய்வூதியதாரர்களின் குறை தீர்ப்பு கூட்டத்தை 03 மாதங்களுக்கு ஒருமுறை இயக்குநர் தலைமையில் நடத்திட கேட்டல்
(4)ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் ஊராட்சி செயலர்+தூய்மை பணியாளர் உள்ளிட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்கள் ஓய்வின்போது பெற்ற தொகையில் 50% வழங்கிட கேட்டல்
(5)ஓய்வு பெற்ற கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியத்தை ஊராட்சி ஒன்றியத்தில் வழங்கிட கோருதல்
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடன் விரைந்து நிறைவேற்றித்தர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அவர் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்..