கூத்தன்கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றிலிருந்து கமுதக்குடி தடுப்பனையில் இருந்து
கூத்தன்கால்வாய்வழியாக ஆற்று தண்ணீர் கீழ்காணும்

*1.வெங்கலக்குறிச்சி 2.புளியங்குடி 3.பொசுக்குடி 4.காக்கூர் 5.அலங்கானூர் 6.பிரபுக்களூர் 7.கிழவனேரி 8.உலையூர் 9.பொக்கனாரேந்தல் 10.வளநாடு*
ஆகிய கிராமங்களில் உள்ள பொதுபணித்துறை கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்துவிட,முதுகுளத்தூர் வட்டாட்சியர்,செயற்பொறியாளர் நீர்வளத்துறை, உதவி செயற்பொறியாளர் ஆகிய அரசு அதிகாரியிடம் வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் *SD.செந்தில்குமார்*,வெங்கலக்குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் R.கலைச்செல்வி ராஜசேகர்,வெங்கலகுறிச்சி  KP.முத்துச்சாமி,புளியங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.சேதுராஜன் சுற்று வட்டார விவசாயிகள் சார்பாகவும் பொது மக்களின் சார்பாகவும் தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இன்று கூத்தங்கல் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நேரில் சென்று பார்வையிட்டு இந்த பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும், என்று மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Also Read  வெங்கலகுறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமாரின் மக்கள் பணி