சோமம்பட்டி ஊராட்சியில் நிவாரணப் பொருட்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் டெங்கு மஸ்தூர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பாதிப்புக்கு அரிசி பருப்பு எண்ணை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சோமம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சரவணா பிராய்லர் ஸ் நிறுவனத்தின் சார்பாக இன்று சோமம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் வழங்கபட்டது.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் A.பாலசுப்ரமணியன் சரவணா பிராய்லர்ஸ் நிர்வாக இயக்குநர் D.சந்திரமோகன் மற்றும் D.கண்ணன் ஊராட்சி மன்ற துணைதலைவர் A.கதிரேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் K.மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Also Read  அரசு நிலத்தில் குடியேற முயன்ற கிராம மக்கள் - அதிர்ச்சியில் அதிகாரிகள்