கழகத்தில் கலகம் – அதிமுகவில் அதிரடி

அனைத்து அதிமுக வேட்பாளர்களும் தேர்தலுக்காக கட்சி தலைமையிலிருந்து 12சி கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், இருபதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 9சியோடு நிறுத்திவிட்டனர்.

மீதம் உள்ள 3சி வந்துவிடும் என கூறியதை நம்பி,கடன் வாங்கி செலவழித்துள்ளனர்.
இதுவரை அவர்களுக்கு 3சி வந்து சேரவில்லை.

அது மட்டுமில்லை,சில வேட்பாளருக்கு 3சி மட்டுமே வந்துள்ளதாம். கட்சி தலைமையிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், இப்படி பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தோல்வி அடைந்துள்ளனர்.

எம்எல்ஏ ஆகி விடுவார் என பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
கடைசி கட்டமாக,அனைவரும் ஒன்றிணைந்து தலைமை கழகத்தில் போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவாகி வருவதாக தகவல்.

-வம்பளந்தான்-

Also Read  ஸ்பீடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் முப்பெரும் விழா !