இராமநாதபுரம் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பூஜ்ஜிய வரவு

இராமநாதபுரம் மாவட்டம்

இந்த மாவட்டத்தில் 424 ஊராட்சிகள் உள்ளன. தற்போது மாநில நிதி(SFC) வரவு வைக்கப்பட்டுள்ளது.

கணக்கு எண்கள் 1,2,7 என மூன்று வகையில் மாநில நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கணக்கு எண்பது மின்சார கட்டணம் போன்று நிரந்தர செலவுக்கானது.

ஏழாவது கணக்கு என்பது ஊராட்சியில் பணிபுரியும் ஊழிர்களின் சம்பளத்திற்கானது.

முதல் கணக்கில் இருந்து தான் ஊராட்சியின் அன்றாட செலவுகள் நடக்கும். குறிப்பாக, திடீரென ஏற்படும் தெருவிளக்கு பழுது,குடிநீர் குழாய் உடைப்பு, மின் மோட்டார்களை சரிசெய்வது, கிராமசபை கூட்டத்தின் செலவு என அத்தியாவசிய செலவுகள் செய்யப்படும்.

அப்படிப்பட்ட முதல் கணக்கிற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 60 மேற்பட்ட ஊராட்சிகளுக்கு மூன்று மாதத்திற்கான வரவு என்பது வெறும் பூஜ்ஜியம் ரூபாய்.

மக்களின் கோரிக்கைக்கு உடனே தீர்வு காண அந்தந்த ஊராட்சி நிர்வாகம் தனது பணத்திலோ, கடன் சொல்லியோ செலவழித்து வந்துள்ளது. இப்போது அவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.

வேறு கணக்கில் இருந்து முதல் கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு அதிகாரிகளை பார்த்து கெஞ்ச வேண்டிய நிலையில் ஊராட்சி தலைவர்கள் உள்ளனர்.

எப்போது விடியும் என்று காத்து கிடக்கிறது இந்தியாவின் முதுகெழும்பான ஊராட்சிகள்.

Also Read  அங்கூர்பாளையம் ஊராட்சி - ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி