இராதாபுரம் ஊராட்சி மன்ற வேட்பாளரின் வாக்குறுதிகள்

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் ஒன்றியத்தில் உள்ளது இராதாபுரம் ஊராட்சி.

இந்த ஊராட்சியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சியில்

 1. செம்மண்குளம்
 2. மகேந்திரபுரம்
 3. சுப்பிரமணிபேரி
 4. ராதாபுரம்
 5. பட்டார்குளம்
 6. தியாகராஜபுரம்
 7. வள்ளார்குளம்
 8. காரியாகுளம்
 9. பண்ணையார்குளம்
 10. பாப்பான்குளம்
 11. பாவிரிதோட்டம்
 12. நெடுவாழி ஆகிய சிற்றூர்கள் உள்ளன.                                                    தற்போது நடைபெற உள்ள  தேர்தலில் இராதாபுரத்தில் நீண்ட ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி மக்களுக்கு நன்கு அறிமுகமான மறைந்த விஸ்வநாதன் ( லெட்சுமி கபே) அவர்களின் மகள் சுப்புலெட்சுமி (எ) சாந்தி  ஊராட்சி தலைவர் வேட்பாளராக ஆட்டோ சின்னத்தில் நிற்கிறார்.      அவரிடம் நீங்கள் மக்களுக்கு சொல்லும் வாக்குறுதிகள் என்ன என்று கேட்டோம். அவர் கூறியதாவது…      * வீட்டிற்கு வீடு தாமிரபரணி குடிநீர்.                                                            * அரசின் உதவித் தொகை தடையின்றி அனைவரும் கிடைத்திட…                                                 * தேவையான அனைத்து இடங்களிலும் மின்விளக்குகள்.         * அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி.                                          * இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலைக்கான பயிற்சி.     * குப்பை,கழிவுகள் இல்லா தூய்மையான ஊராட்சி.                      * மகளிர்களுக்கான சிறப்பு திட்டங்கள்.                 இப்படி…பல்வேறு திட்டங்களை 5 ஆண்டில் நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகிறேன் என்றார்.  அவரின் வெற்றிக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.
Also Read  வேப்பிலான்குளம் ஊராட்சி - திருநெல்வேலி மாவட்டம்