ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் பிரியா ஆனந்த்

பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன.

இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆக உள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். மேலும் இப்படத்தை இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து அவரும் இயக்க உள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே எல்.கே.ஜி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். மேலும் நடிகர் சத்யராஜும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்