மத்திய அரசு பணியிடங்கள்-ஆலோசனைகளுக்கு தயார்

மத்திய அரசுத்துறைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேலான பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தேர்வு நடத்த இருக்கிறது. விண்ணப்பம் அனுப்புவதற்கு இந்த மாதம் 31ஆம் தேதி இறுதிநாள். பட்டதாரிகள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வு தொடர்பான ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் இலவசமாக விளக்கங்களை அளிக்க நமது குழு தயாராக இருக்கிறது. இன்று தொடங்கி தேர்வு நாள் வரையில் இந்தக் குழு சுறுசுறுப்புடன் இயங்கும்.

இதற்கான தனி மின்னஞ்சல் முகவரி இது: centraljobs2021@gmail.com இந்தத் தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியில் இருக்கிற பல உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு வழி நடத்துவார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மத்திய அரசுப் பணிக்கு வர வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு; நம்முடைய குறிக்கோள்.

இது முற்றிலும் இலவச சேவை. இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர்களை அன்புடன் அழைக்கிறோம்.

வணக்கங்களுடன் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

Also Read  அச்சங்குளம் / அச்சன்குளம் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!