அபாய சூழ்நிலையில் மின்கம்பம் – ஊராட்சி தலைவர் செந்தில்குமார் வேண்டுகோள்

இராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சி
வெ.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சந்திரன்  வீடு அருகே உள்ள மின் கம்பம் எழும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது.

இந்த மின்கம்பம் மூலம் தான் மின்சாரம் செல்ல வேண்டும் பலத்த காற்று வீசினாலே மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.

பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் கிராம மக்களின் மனதில் உள்ளது.

முதுகுளத்தூர் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்களின் சார்பாக. வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read  நத்தம் ஊராட்சி - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி