பக்தர்களின் மனக் குறைகளை தீர்க்கும் பிறைசூடிய பெருமாள் – சிறப்பு பார்வை

பிறைசூடித் திகழும் சிவபெருமானைச் `சந்திரமௌலி’ என்று போற்றுவோம். அவ்வாறே திருமாலும் பிறைசூடித் திகழ்கிறார் ஒரு திருத்தலத்தில்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள வைணவ க்ஷேத்திரம் தலைச்சங்காடு. இங்குள்ள அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயிலில்தான், பெருமாள் பிறைசூடிய பிரானாகக் காட்சி தருகிறார்.

திருமங்கையாழ்வாரும் மணவாளதாசனும் மங்களாசாசனம் செய்து போற்றிய இந்தக் கோயிலில், கிழக்கு நோக்கிய சந்நிதியில் ஶ்ரீதேவி, பூமாதேவி சமேதராக – மார்பில் மகாலட்சுமித் தாயாரைத் தாங்கியபடி அருள்கிறார் பெருமாள்.

இந்த ஊரின் தொன்மைச் சிறப்பை சிலப்பதிகாரம் போற்றுகிறது. காவிரிப்பூம் பட்டினத்தின் அருகிலுள்ள இவ்வூர், அந்தக் காலத்தில் சங்கு வணிகத்தில் சிறந்து விளங் கியது. அதனால் இந்த ஊருக்கு தலைசெங்கோடு என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே தலைச் சங்கோடு ஆனது என்கிறது தல வரலாறு.

இயற்கை எழில் சூழ்ந்த இந்தத் திருத்தலத்தில், பெருமாள் சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. மேற்கில் தலைச்சங்கநாச்சியார் என்ற திருநாமத்துடன் தாயார் தனிச்சந்நிதி கொண்டுள்ளார்.

இக்கோயிலின் உற்சவருக்கு ‘வெண்சுடர்ப் பெருமாள்’ என்பது திருநாமம். சந்திரனைத் தன் தலையில் சூடிய பெருமாள் அருளும் இந்தத் தலத்தின் புஷ்கரணிக்குச் `சந்திர புஷ்கரணி’ என்றே பெயர். இங்குள்ள விமான மும் சந்திர விமானமாகும். சந்திரனின் சாபத்தைப் போக்கி அருள் புரிந்ததால் இந்தப் பெருமாளுக்கு `சந்திர சாபகர்’ என்ற திருப் பெயரும் உண்டு.

Also Read  திருநெல்வேலி மாவட்டம் - கண்டியப்பேரி சாஸ்தா கோயில்

ஸ்தல வரலாறு

“சந்திரன் அழகில் சிறந்து விளங்கியதால், தட்சன் தன் 27 மகள்களையும் அவனுக்கு மணம் செய்துகொடுத்தார். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டுமே அதிகம் அன்பு செலுத்தினான். இதனால் வருந்திய மற்ற பெண்கள், தந்தையிடம் முறையிட்டனர். தட்சன் சந்திரனுக்குப் பலவாறு புத்திமதி கூறியும் அவன் கேட்கவில்லை.

அதனால் கோபம் கொண்ட தட்சன், `உன் கலைகள் அனைத்தும் குறையட்டும்’ என்று சாபமிட்டார். சாபம் பலித்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாகக் குறைந்து, பொலிவை இழந்து தவித்தான் சந்திரன். ஒரு கலை மட்டுமே எஞ்சியிருக்க, சந்திரனின் ஆணவம் அழிந்தது. அவன் பெரமாளைச் சரணடைந்து விமோசனம் வேண்டினான்.

அவனுக்குத் திருவருள் புரிய சித்தம் கொண்டார் பெருமாள். “சந்திரனே! நீ திருவரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வழிபடு. அதன் பலனால் உன் சாபம் தீரும்” என்று அருள்புரிந்தார்.

அதன்படி பூலோகம் வந்த சந்திரன் திருவரங்கம் சென்றான். அங்கே நெய்தல் பூக்கள் நிறைந்த புஷ்கரணியில் நீராடி, 15 ஆண்டு காலம் ரங்கநாதனை தரிசித்துத் தவம் செய்தான். பின்னர் மயிலாடுதுறை அருகிலுள்ள திருஇந்தளூரில், பரிமள ரங்க நாதரை வழிபட்டான். தொடர்ந்து இந்தத் தலத்துக்கு வந்துசேர்ந்தான்.

Also Read  தீராத நோய்களை தீர்க்கும் அதிசய தீர்த்த குளம்

இங்கே, புஷ்கரணியில் நீராடி இங்குள்ள பெருமாளை ஆராதித்து வந்தான். விரைவில் சந்திரனுக்குக் காட்சியளித்த பெருமாள், தன் தலையில் பிறையைச் சூடி, சந்திரனின் சாபத்தைத் தீர்த்தருளினார்.

எனவே ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ள அன்பர்கள், இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு நன்மைகள் அடையலாம்” என்று விவரித்தார்.

பாவங்களை போக்கும் புண்ணிய தீர்த்தம்

இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இத்தலத்துப் பெருமாளை அர்ச்சித்து வணங் கினால், பாவங்கள் தொலையும். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

தியானக் கோலத்தில் அமர்ந்த நிலையில் இங்கு அருளும் நரசிம்மருக்குப் பானகம் நிவேதனம் செய்து, மாலை சூடி வணங்க ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் தொல்லை விலகும். மனக்குறை தீரும். தீவினைகள் அகலும். ஆஞ்சநேயரை வணங்க சனிதோஷம் நீங்கும்” என்றார். சந்திரன் மனோகாரகன் அல்லவா? ஆகவே, மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் தலமிது என்கிறார்கள் பக்தர்கள்.